திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லிப் லாக் வீடியோவால் புகுந்த வீட்டு மானமே போச்சு.. நடிகையை வெளுத்து வாங்கிய மாமியார்

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம்என பிற மொழி படங்களிலும் டாப் நடிகையாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவரின் லிப் லாக் வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோ அவருடைய புகுந்த வீட்டிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

முதலில் உடையில் மட்டுமே கவர்ச்சி காட்டிக் கொண்டிருந்த இந்த நடிகை, இப்போது படங்களில் லிப் லாக் காட்சிகளிலும், படுக்கையறை காட்சிகளிலும் துணிச்சலுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த துணிச்சல் யார் கொடுத்த தைரியத்தால் வந்திருக்கிறது என்பதும் தெரிய வந்துள்ளது.

Also Read: தெருவுக்கு ஒரு சின்ன வீடு.. 50 வயதில் நடிகர் அடிக்கும் லூட்டி

நடிகை தற்போது காதலில் விழுந்திருக்கிறார். திருமணம் ஆகப்போவதால் காதலனுடன் மட்டுமல்ல படத்தில் நடிக்கும் நடிகர்களுடனும் எல்லை மீறி நடித்து, தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். இதற்கு காதலனும் ஓகே சொல்லிவிட்டார். அவரும் ஒரு நடிகர் என்பதால், இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் காதலனின் அம்மாவிற்கு இந்த லிப் லாக் வீடியோவை பெருத்த அவமானமாக நினைக்கிறார். இதனால் கடும் கோபத்தில் இருக்கும் மாமியார், இந்த காதல் ஜோடி இடம் எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். உன்னால் குடும்பமானமே போச்சு என்றும் நடிகையை வெளுத்து வாங்கி விட்டார்.

Also Read: இந்த வயசுலயும் கேட்கும் பொம்பள சோக்கு.. இளம் நடிகைகளின் பின்னால் ஜொள்ளு விட்டு அலையும் நடிகர்

நடிகையும் மாமியாரை சமாதானப்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால், விரைவில் திருமணம் செய்து கொண்டு அவருடைய ஆசையை நிறைவேற்றும் முடிவில் இருக்கிறார். எனவே விரைவில் இந்த காதல் ஜோடியின் திருமண அறிவிப்பும் வெளியாக போகிறது. தற்போது 33 வயதாகும் இந்த நடிகை இவ்வளவு நாள் சினிமாவில் செய்த சேட்டை எல்லாம் போதும் என்று மூட்டை வைத்துவிட்டு கல்யாணத்திற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

Trending News