வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

கோயிலில் சந்தியாவை மந்திரிச்சு விட்ட மாமியார்.. என்ன கொடுமை சரவணா!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் மனைவியின் கனவு என்ன என்பதை தெரிந்துகொண்ட சரவணன், சந்தியாவின் அம்மா அப்பா கண்ட கனவையும் சேர்த்த நிறைவேற்றும் நோக்கத்தில், அதைத் தன்னுடைய அம்மா சிவகாமி சம்மதத்துடன் செய்ய விரும்புகிறான்.

இருப்பினும் சிவகாமி இதற்கு மறுத்துவிட்டதால், கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவிடம் பேசி அவரை சமாதானப்படுத்தி சந்தியாவை எப்படியாவது போலீஸ் அதிகாரியாக மாற்றிவிட வேண்டும் என சரவணன் உறுதியாக இருக்கிறான்.

ஆனால் மறுபுறம் சிவகாமி நிச்சயம் சந்தியாவை போலீசாக ஒரு காலமும் அனுமதிக்க மாட்டேன் என உறுதியாக இருக்கிறார். இவ்வாறு சரவணன் சந்தியாவை ஐபிஎஸ் அதிகாரியாக மற்ற நினைப்பதை தடுக்க சிவகாமி, சந்தியாவை கோவிலுக்கு அழைத்துக்கொண்டு சென்றார்.

‘நீ போலீசாக விரும்புகிறாய் என சரவணனிடம் கூறினான். அதற்கு முன்பு நீ குடும்பப் பெண்ணாகவும், சரவணனின் மனைவியாகவும் உன்னுடைய கடமை என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை முதலில் நிறைவேற்று’ என கோயிலில் இருந்த படி சந்தியாவை சிவகாமி மந்திரிச்சு விடுகிறார்.

இதன்பிறகு வீட்டுக்கு வந்த சந்தியா, தன்னுடைய அம்மா அப்பா போட்டோவை கையில் எடுத்துக்கொண்டு அவர்களது கனவை நிறைவேற்ற முடியாது என்பதை நினைத்து அழுகிறாள். இதை சரவணன் வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்.

பிறகு சரவணன் சந்தியாவிடம், ‘உங்களுடைய கனவை நோக்கி நடை போடுவதில் மட்டுமே உறுதியாக இருங்கள்’ என சந்தியாவின் கனவுக்கு பக்கபலமாக இருப்பேன் என்பதை சரவணன் திட்டவட்டமாக தெரிவிக்கிறான். இதன்பிறகு சந்தியா ஐபிஎஸ் ஆகும்வரை குடும்பத்தை எதிர்த்து சரவணன், சந்தியாவிற்காக பல திட்டுகளை வாங்க காத்திருக்கிறான்.

Trending News