வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அமேசான் பிரைமில் தொடர்ந்து முதலிடத்தில் சக்க போடு போட்ட படம்.. லாஜிக் இல்ல மேஜிக் காட்டிய சம்பவம்

Amazon Prime Movies: படம் பார்க்க வருவோர்கள் இடையே சுவாரஸ்யம் ஏற்படுத்தும் வகையில், கதை அமைந்திருந்தால் படம் கண்டிப்பாக வெற்றி கண்டு விடும். ஆனால் இப்பொழுது வெளிவரும் படங்களில் இதுபோன்ற எந்த சுவாரஸ்யமும் இல்லாத நிலையில் அவை வெற்றி காண்கிறது. அதை குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

அவ்வாறு ராம் சங்கையா இயக்கத்தில் நகைச்சுவை படமாய் திரையிலும், ஓ டி டி லும் வெளிவந்த படம் தான் தண்டட்டி. இதெல்லாம் ஒரு படமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது அமேசான் பிரைமில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

Also Read: கமலால் உயரும் வடிவேலுவின் மார்க்கெட்.. தேவர் மகனுக்கு பிறகு இணையும் கூட்டணி

இப்படத்தில் பசுபதி, விவேக் பிரசன்னா, ரோகினி, தீபா சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படம் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி திரையில் வெளியாகியது. அதைத்தொடர்ந்து ஜூலை 14ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டது.

கிராமத்து கதையை மையமாகக் கொண்டு, இறந்த மூதாட்டியின் காதில் அணிந்திருந்த அணிகலனான தண்டட்டி தொலைந்து போனதை அழகுற சொல்லும் படமாய் அமைந்திருக்கிறது. இதில் என்ன சிறப்பு எனது கேட்கும் அளவிற்கு இப்படத்தில் எந்த சுவாரஸ்யமும் இல்லை.

Also Read: நடிப்பில் பட்டையை கிளப்பியும் பிரயோஜனம் இல்லாமல் போன 6 நடிகர்கள்.. பொழைக்கத் தெரியாமல் நிற்கும் விக்ராந்த்

ஆனால் மக்கள் பார்க்க வேண்டிய எதார்த்தமான கதையோடு அமைந்து, நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இதுபோன்ற எளிமையான கதை கொண்ட நல்ல படங்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ள இந்த படத்தில் கூடுதல் சிறப்பை ஒளிபரப்பாளரான மகேஷ் முத்துசாமி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை குறைந்த பட்ஜெட்டில் தயாரிப்பை மேற்கொண்டார் எஸ் லக்ஷ்மன் குமார். மக்கள் தன் பொழுது போக்குக்காக பார்க்க வரும் படத்தில், எதார்த்தத்தை காட்டி வெற்றி கண்ட படங்களில் தண்டட்டியும் ஒன்று. இது போன்ற காரணத்தால், ஓடிடியில் இப்படம் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. மேலும் ஆங்கிலத்தில் ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் லாஜிக் இல்லாம் மேஜிக் காட்டிய படம் என்றே கூறலாம்.

Also Read: காசு கொடுத்து பிரபாஸின் கேரியரை க்ளோஸ் செய்ய நடக்கும் சதி.. ப்ளூ சட்டை வெளியிட்ட ஷாக்கான பதிவு

இதைத்தொடர்ந்து இந்த வரிசையில் இடிதாக்கி ஸ்பெஷல் பவர் பெரும் ஹிப் ஹாப் தமிழா நடிப்பில் வெளிவந்த வீரன், மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னின் செல்வன் 2, நட்பை போற்றும் விதமாய் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த கழுவேத்தி மூர்க்கன், பழிவாங்கும் உணர்ச்சி கொண்டு வரலட்சுமி நடிப்பில் வெளிவந்த கொன்றால் பாவம் போன்ற படங்கள் அமேசான் பிரைமில் வெளிவந்து நல்ல விமர்சனங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News