சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

5 இயக்குனர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இசையமைப்பாளர்.. செல்வராகவன் படம் என்றாலே யுவன் இல்லாமல் எப்படி

Five Directors: பொதுவாக ஒரு படம் வெற்றி அடைந்து விட்டால் அவர்களுடைய காம்போ மக்கள் மனதில் மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி விடும். அந்த வகையில் காலம் காலமாக இவர்களுடைய காம்பினேஷன் சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு பல பிரபலங்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்

அதில் எப்போதுமே மனதுக்கு இதமான பாடல் வரிகளையும், முணுமுணுக்க வைக்கிற இசையும் என்றைக்குமே காலத்தால் அழிக்க முடியாது. அந்த வகையில் கண்ணதாசன், எம் எஸ் விஸ்வநாதன் மற்றும் வாலி இவர்களுடைய கூட்டணி மிகப்பெரிய வெற்றி கூட்டணியாக அமைந்திருக்கிறது.

Also read: தளபதி பட வாய்ப்பை தவறவிட்ட ஹாண்ட்சம் ஆக்டர்.. தளபதி படத்தில் மணிரத்தினம் முதலில் செலக்ட் செய்த கலெக்டர்

அத்துடன் இவர்கள் மூவரும் சேர்ந்து விட்டால் அப்போதைய காலத்தில் சிவாஜி மற்றும் எம்ஜிஆர் படங்களில் வரும் பாடல்கள் அனைத்தும் மக்கள் மனதில் இடம் பிடித்து விடும். அடுத்ததாக இளையராஜா இசையின் கடவுளாக பலரும் பார்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது வரை இவருடைய பாடலுக்கு அடிமை என்று சொல்லக்கூடிய அளவிற்கு பெயர் வாங்கி இருக்கிறார்.

அப்படிப்பட்ட இவர் எல்லா இயக்குனர்களுக்கும் ஒத்துப் போகும் வகையில் மல்டிபிள் இசையமைப்பாளராக ஜொலித்திருக்கிறார். மேலும் இயக்குனர் சங்கர் இயக்கும் படங்களுக்கு வைரமுத்துவின் முத்தான வரிகளும், ஏஆர் ரகுமானின் இசையும் கை கொடுத்து மிகப்பெரிய வெற்றியை அளித்திருக்கிறது.

Also read: குப்புற விழுந்தாலும் மீசையில மண்ணு ஓட்டல.. பார்த்திபனுக்கு ஆப்படித்த ஏ ஆர் ரகுமான், வைரலாகும் ட்வீட்

அதேபோலதான் இயக்குனர் மணிரத்தினத்திற்கும், வைரமுத்து மற்றும் ஏஆர் ரகுமான் காம்பினேஷன் வெற்றியை கொடுத்திருக்கிறது. அடுத்ததாக கௌதம் மேனன் படங்களுக்கு உயிரூட்டும் வகையில் இருந்தது பாடலாசிரியர் தாமரை மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையும் தான்.

இவர்களை தொடர்ந்து செல்வராகவனுக்கு மிகப்பெரிய வெற்றிக் கூட்டணி என்று சொல்ல கூடிய அளவிற்கு இருந்தவர்கள் தான் யுவன் மற்றும் நா முத்துக்குமார். செல்வராகவன் இயக்கிய படங்கள் என்றாலே அதில் இவர்கள் இரண்டு பேரும் இல்லாமல் இருக்காது. இவர்கள் இணைந்து விட்டாலே வெற்றி நிச்சயம். ஆனால் தற்போது நா முத்துக்குமார் இல்லாததால் செல்வராகவன் மற்றும் யுவன் காம்போ மட்டும் தொடர்கிறது.

Also read: இசை உலகின் போதை மன்னன் யுவன்.. இன்றுவரை இசைக்காக கொண்டாடப்படும் அந்த ஏழு படங்கள்

- Advertisement -spot_img

Trending News