வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

பாட வந்த பெண்களை ஏமாற்றி ஆசையை தீர்த்துக்கிட்ட மியூசிக் டைரக்டர்.. வண்டவாளத்தை புட்டு புட்டு வைத்த பயில்வான்

Bailwan About Music Director: தற்போது சோசியல் மீடியா அதிகரித்ததால் எல்லா விஷயங்களும் அனைவரது பாக்கெட்டிலும் வந்து விழுகிறது. ஆனால் இதை விட மிக அதிகமாக ஒவ்வொரு  சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட விஷயங்களை நோண்டி நொங்கு எடுத்து பரப்புவதையே வேலையாக வைத்து வருகிறார் சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன். அந்த வகையில் இவர் வாயைத் திறந்தாலே ஒவ்வொருவருடைய இமேஜும் காலியாகி விடும்.

அப்படித்தான் தற்போது இவருடைய கண்ணுக்கு சிக்கியவர் இசையமைப்பாளர் தீனா. சும்மாவே காலில் சலங்கை கட்டிட்டு ஆடுவாரு. இப்போ விஷயங்கள் எல்லாம் தொக்காக மாட்டிக்கிட்டது, இனிமேல் சொல்லவா செய்யணும். இசையமைப்பாளர் தீனா பற்றிய அந்தரங்க விஷயங்களை அனைத்தையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.

அதாவது இசையமைப்பாளர் தீனா எந்த அளவிற்கு மோசமானவர், இசை கலைஞர்கள் பொறுப்பில் இருக்கும் பொழுது பணத்தை எப்படி போர்ஜரி பண்ணி ஆட்டைய போட்டிருக்கிறார் என்ற விஷயத்தை கங்கை அமரன் சோசியல் மீடியாவில் சொல்லி காரி துப்பிவிட்டார். அத்துடன் இளையராஜாவின் மகள் பவதாரணி கையெழுத்தை போட்டு 80 லட்சம் வரை ஆட்டையை போட்டு இருக்கிறார்.

Also read: இது என்ன அரசியல் கட்சியா.? இளையராஜாவிற்காக கடுப்பில் கொந்தளித்து பேசிய கங்கை அமரன்

இந்த விஷயங்கள் வெளியே தெரியாமல் மறைப்பதற்காக தொடர்ந்து பொறுப்பில் இருக்க வேண்டும் என்று அட்டூழியம் செய்து வருவதாக கங்கை அமரன் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இந்நிலையில் இவரைப் பற்றி மற்ற விஷயங்களும் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதாவது இவரிடம் வீணை வாசிக்க வந்த வசந்தா என்ற பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டாராம்.

அதன்பின் அவர் விடாப்பிடியாக தீனாவை மேரேஜ் பண்ணி இரண்டு பிள்ளைகளை பெற்று எடுத்திருக்கிறார். ஆனாலும் தீனாவின் நடவடிக்கைகள் எதுவும் சரி இல்லாததால் உன்னுடைய உறவே வேண்டாம் என்று மனைவி தனியாக போய்விட்டார். அத்துடன் தீனா, பிள்ளைகளையும் சரியா பார்த்துக் கொள்ளாமல் போனதால் பிள்ளைகளும் இவரை அப்பாவாக வெளியே சொல்லாமல் அவர்களும் பிரிந்து போய் விட்டார்கள்.

ஆனாலும் இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் இவரிடம் பாட்டு பாடுவதற்கு கத்துக்க வந்த சுசிலா என்ற பெண்ணை கல்யாணம் பண்ணாமல் அவருடன் குடும்பம் நடத்திருக்கிறார். அதே மாதிரி இன்னொரு பெண் நஸ்ரியா என்பவரை கரெக்ட் செய்து அவருடனும் தனியாக ஒரு வீட்டில் குடித்தனம் நடத்தி வருகிறார். ஆக மொத்தத்தில் இரண்டு வீட்டிற்கும் போயிட்டு வருகிறார். அதனால் இதை எல்லாம் சமாளிப்பதற்காக தான் 80 லட்சம் பணத்தை ஏமாற்றி இருக்கிறார் என்று பயில்வான் கூறியுள்ளார்.

Also read: கங்கை அமரனை பற்றி தெரியாத விஷயம்.. அண்ணனின் புகழ் வெளிச்சத்தில் மங்கிய மகா கலைஞன்

Trending News