Gossip: சினிமா நடிகர்கள் என்றாலே எந்த கஷ்டமும் இருக்காது. சுக போகமாக வாழ்கிறார்கள் என்ற எண்ணம் இன்றளவும் மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால் அவர்கள் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
அதனாலேயே பல நடிகைகளின் தற்கொலை செய்திகளையும் நாம் கேள்விப்படுகிறோம். அப்படித்தான் அழகு பதுமையாக ரசிகர்களை கவர்ந்த நடிகை ஒருவரும் தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.
குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த இவர் ஹீரோயினாக பக்கத்து மாநில திரையுலகை ஆட்சி செய்தார். இவருடைய அழகுக்கும் நடிப்பிற்கும் அன்றைய கால ரசிகர்கள் கிட்டத்தட்ட அடிமையாகவே இருந்தனர்.
அப்போதைய சூப்பர் ஸ்டார் முதல் அனைத்து நடிகர்களுடனும் நடித்திருக்கும் இந்த நடிகை கோலிவுட்டுக்கும் பரீட்சயமானவர் தான். ரொம்பவும் சுயமரியாதையோடு தனக்கான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்த இவருக்கு காலப்போக்கில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.
அழகு நடிகையின் மரணம்
இதற்கு இடையில் ஏற்கனவே திருமணம் ஆன ஒரு இயக்குனருடன் இவர் காதலில் இருந்தார். ஆனால் இன்னொரு பெண் வாழ்க்கையை கெடுக்க கூடாது என சந்தோஷமாக அவரை விட்டு பிரிந்தார்.
அதன் பிறகு சினிமாவில் நடித்து வந்த இவர் வாய்ப்பு குறைந்ததால் நாடகத்திலும் நடிக்க ஆரம்பித்தார். அந்த சமயத்தில் தான் அவருக்கு திருமணம் நடந்தது ஆனால் அது அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக அமையவில்லை. இப்படி பல மன உளைச்சல்கள் அவரை தற்கொலை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.
ஒரு கட்டத்தில் 56 தூக்க மாத்திரைகளை விழுங்கிய அந்த நடிகை வைர மோதிரத்தை பொடி செய்து அதையும் சாப்பிட்டு இருக்கிறார். ஏனென்றால் தான் பிழைத்து விடக்கூடாது என்ற காரணம் தான்.
இப்படி உச்சகட்ட விரக்தியில் தன் உயிரை விட்டார் அந்த நடிகை. இது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்வடைய வைத்த நிலையில் அவருடைய மரணம் இப்போது வரை ஒரு மர்மமாகவே பார்க்கப்படுகிறது.
நடிகைகளை பற்றி வெளிவராத கிசுகிசு செய்திகள்
- உயர்ந்த நடிகைக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுக்கும் ஹீரோ
- இளம் நடிகைகளுக்கு செக் வைக்கும் நடிகர்
- ஆன்ட்டி நடிகை மீது கண் வைத்த தயாரிப்பாளர்