புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஒரு நாளைக்கு 35 பீர், ஒரு லட்ச ரூபாய் .. மிர்ச்சி சிவா படத்துக்கு சங்கு ஊதும் புதிய நடிகர்

தமிழ் படங்களை அப்படியே கலாய்த்து படமாக நடிப்பதில் கெட்டிக்காரர் சிவா. ஆனால் அந்த மிர்ச்சி சிவாவையே அலற விட்டிருக்கிறார் ஒரு நடிகர். தற்போது ஷங்கரின் உதவியாளராக இயக்குனர் எஸ் பி ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துக்கொண்டிருக்கும் படம் சுமோ.

நகைச்சுவை படமாக உருவாகி கொண்டிருக்கும் இந்தப் படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டில் நகைச்சுவையாக படமாக்கப்படும் இத்திரைப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகி மொத்த தமிழ்நாட்டையும் வாயைப் பிளக்க வைத்தது.

அந்த அளவிற்கு ஒரு மாமிசமலை ஆன ஜப்பான்காரரான சுமோ வீரர் யோஷிநோரி தாஷிரோ ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இப்பொழுது அந்த படத்தின் சூட்டிங் வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்காக அந்த ஜப்பான் நடிகர் யோஷிநோரி தாஷிரோ-க்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகிறதாம். ஒரு நாளைக்கு அந்த ஜப்பான் நடிகர் கிட்டத்தட்ட 35 பீர் குடிக்கிறாராம். அதுமட்டுமின்றி ஜப்பான் உணவுகளை ஹோட்டலில் வாங்கி வெளுத்து கட்டுகிறார்.

ஆகவே உருவத்தில் பெரிதாக இருக்கும் இவருக்கு என்றே பிரத்தியேகமாக ஒரு கழிவறை அமைக்கப்பட்டதாம். அதுமட்டுமன்றி காஸ்ட்லி ஹோட்டலில் இவருக்காகவே தனி ரூம் புக் செய்து கொடுத்துள்ளார்கள். இப்பொழுது அந்த செலவுகளை சரிக்கட்ட முடியாமல் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தவித்து வருகின்றனர்.

இங்கே செலவாகிறது என்று ஜப்பானிலும் ஒரு இருபது நாட்கள் கூட்டிட்டு போயி சூட்டிங் எடுத்து வந்துள்ளனர். மற்ற படங்களை கேலி கிண்டல் செய்யும் மிர்ச்சி சிவாவின் சுமோ படத்திற்கு இந்த ஜப்பான் நடிகர் சங்கு ஊதி விடுவார் போல தெரிகிறது.

sumo-cinemapettai
sumo-cinemapettai

Trending News