
Sun Tv Serial: இந்தா வருது அந்தா வருது என்று சொல்லிக் கொண்டிருந்த சன் டிவியின் புது சீரியல் இன்னும் வந்த பாடாக இல்லை. கிட்டத்தட்ட ப்ரோமோ வெளியிட்டு ஒரு வருடம் ஆகியும் அதற்கான சீரியல் மட்டும் வரவில்லை. இதற்கு என்ன காரணம் என்றால் பிரைம் டைம் ஆன 7 மணிக்கு தான் அந்த புது சீரியலை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் அதற்கான நேரம் எதுவும் கிடைக்காததால் அந்த சீரியலை ஒத்தி வைத்திருந்தார்கள். ஆனால் தற்போது அந்த சீரியலில் கமிட்டாகி இருக்கும் ஹீரோ சென்னைக்கு வந்துவிட்டார், ஷூட்டிங் துவங்கிவிட்டது. அதனால் அடுத்த மாதத்தில் அந்த சீரியலை ஒளிபரப்பு செய்வதற்கு தயாராகி விட்டார்கள்.
அந்த சீரியல் தான் ஆடுகளம். இதில் ஹீரோவாக விஜய் டிவியில் மௌன ராகம் என்ற சீரியலில் நடித்த கதாநாயகன் சல்மானு என்கிற வருண் கமிட் ஆகியிருக்கிறார். இவருக்கு ஜோடியாக சன் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்த அன்பே வா என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்த டெலினா டேவிஸ் கமிட் ஆகி இருக்கிறார்.
இந்த நாடகத்திற்கான ப்ரோமோ கிட்டத்தட்ட ஒரு வருடமாக சன் டிவியில் போட்ட நிலையில் அடுத்த மாதம் துவங்கப் போகிறது. அந்த வகையில் அவர்கள் கேட்டுக் கொண்ட படி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கு பதிலாக ரஞ்சனி சீரியலை முடித்துவிட்டு அன்னம் சீரியல் இரவு 10 மணிக்கு மாற்றப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.