திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சூரிக்கு போட்டியாக களமிறங்கவுள்ள அடுத்த நடிகர்.. ஹீரோவாக அவதாரம் எடுக்க தயாரான காமெடி நடிகர்

அண்மையில் காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறி நடித்து வருவது தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்காகி உள்ளது. 60களில் காமெடி நடிகர் நாகேஷ், சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்த நிலையில், அதற்கு அடுத்தப்படியாக நடிகர் வடிவேலு 23 ஆம் புலிகேசி படத்தில் ஹீரோவாக நடித்தார். இவரை தொடர்ந்து விவேக் சில படங்களில் ஹீரோவாக நடித்தார்.

மேலும் யாரும் எதிர்பார்க்காத வகையில், நடிகர் சந்தானம் திடீரென ஹீரோவாக நடிக்க முடிவெடுத்து படம் ஓடுகிறதோ, இல்லையோ ஹீரோவாகாதான் நடிப்பேன் என அடம்பிடித்து நடித்து வருகிறார். இவருக்கு அடுத்தபடியாக நடிகர் யோகிபாபுவும் தர்மபிரபு, மண்டேலா உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும், பல படங்களில் காமெடியனாகவும் மாறி மாறி நடித்து வருகிறார்.

Also Read: வடிவேலுவின் திமிரால் பறிப்போன பட வாய்ப்பு.. வாய்ப்பை தட்டிப்பறித்துச் சென்ற யோகி பாபு

ஆனால் இவர்களுக்கெல்லாம் ஒரு படி மேலாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே வெற்றி இயக்குனருடன் நடிகர் சூரி இணைந்து விடுதலை பாகம் 1 படத்தில் நடித்தார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தில், நடிகர் சூரி ஹீரோவாக அறிமுகமாகி நடித்த நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் ஹீரோவாக தான் சூரி கமிட்டாகி வருகிறார். அந்த வகையில், பிரபல காமெடி நடிகரும் இவரை போலவே புது அவதாரம் எடுத்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் நடந்த காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகர் ரோபோ ஷங்கர். 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் தனக்கென தனி ஸ்டைலை கொண்டு காமெடியனாக வளம் வருகிறார். இதனிடையே ரோபோ ஷங்கரின் அடையாளமாக இருந்த அவரது குண்டான உடல், திடீரென மெலிந்து பாவமாக காணப்பட்டார்.

Also Read: வெற்றிமாறனை கெட்டியாக பிடித்துக் கொண்ட சூரி.. அடுத்ததாக வரப்போகும் சர்ப்ரைஸ்

ஆரம்பத்தில் இவருக்கு எதோ நோய் பாதிக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் நினைத்த நிலையில், புதிய படத்துக்காக ரோபோ ஷங்கர், தன் உடலை குறைத்துள்ளார் என அவரது மனைவி ப்ரியங்கா தெரிவித்தார். ஆனால் காமெடியனாக நடிக்க எதற்கு ரோபோ ஷங்கர் உடல் எடையை குறைக்க வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கான பதில் கிடைத்துள்ளது.

நடிகர் ரோபோ ஷங்கர் தற்போது புது படம் ஒன்றில் கமிட்டாகி அதில் அவர் ஹீரோவாக நடித்து வருகிறார். சத்தமே இல்லாமல் ரோபோ சங்கர் செய்து வந்த இந்த விஷயம் சமூக வலைத்தளத்தில் குடும்பத்துடன் அவர் போட்ட புகைப்படத்தின் மூலமாக இந்த விஷயம் பூதகரமாக வெடித்துள்ளது. இப்படி ஒவ்வொரு காமெடி நடிகர்களும் ஹீரோவானால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களின் பற்றாக்குறை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பஞ்சத்துல அடிபட்ட மாதிரி மாறிய ரோபோ சங்கர்.. எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே

Trending News