புதன்கிழமை, ஜனவரி 8, 2025

சத்தமே இல்லாமல் சினிமாவில் களமிறங்கிய ரஜினியின் வாரிசு.. நடிப்பை தாண்டி கையில் எடுக்கும் ஆயுதம்

Next generation enter into Cinema from Rajini family: ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க, அது சினிமா துறையில் இருப்பவர்களுக்கு தான் சரியாக பொருந்தும். வீட்டில் யாராவது ஒருத்தர் சினிமாவில் இருந்தால் அவர்களை தொடர்ந்து அடுத்தடுத்து அந்த குடும்பத்திலிருந்து ஒவ்வொருவராக சினிமாவுக்குள் களம் இறங்குவார்கள். அப்படித்தான் இப்போது தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் ரஜினியின் வாரிசு, இன்னொரு பக்கம் தனுஷின் வாரிசு என பெரிய பக்க பலத்தை கொண்டிருக்கும் யாத்ரா சினிமாவுக்குள் வந்திருக்கிறார்.

தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனர், விஜய் சேதுபதியின் மகன் ஹீரோ என ஒவ்வொரு முன்னணி ஹீரோக்களும் தங்களுடைய வாரிசுகளை சினிமாவில் களம் இறங்குவது இப்போது கோலிவுட் வட்டாரத்தில் டிரெண்டாக பேசப்பட்டு வந்தது. ஆனால் எதையுமே வெளியில் சொல்லாமல் நடிகர் தனுஷ் தன்னுடைய மகன் யாத்ராவை வைத்து ஒரு படத்தையே சைலன்ட் ஆக எடுத்து முடித்து ரிலீசுக்கு ரெடியாக வைத்திருக்கிறார்.

அப்பா நடிகர், தாத்தா கஸ்தூரிராஜா இயக்குனர், பெரியப்பா இயக்குனர் என இந்த பக்கத்திலும் யாத்ரா குடும்பத்தை சேர்ந்தவர்கள் எல்லோருமே சினிமா பிரபலங்கள் தான். யாத்ராவின் அம்மா சைடு பார்த்தால் தமிழ் சினிமாவின் ராஜாவாக இருக்கிறார் தாத்தா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அம்மா இயக்குனர், சித்தி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என முழுக்க முழுக்க சினிமா குடும்பத்தை சேர்ந்த யாத்ரா சினிமாவுக்கு வந்ததில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை என்றாலும், இந்த விஷயம் எப்படி கடுகளவு கூட வெளியில் தெரியாமல் இருந்தது என்பது தான் இப்போது ஆச்சரியமாக இருக்கிறது.

Also Read:அடுத்தடுத்து ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் 5 படங்கள்.. விஜய் அஜித் பிஸியாக இருப்பதால் ஜெட் வேகத்தில் பறக்கும் தலைவர்

நடிகர் தனுஷ் ஒரு பக்கம் அடுத்தடுத்து ஹீரோவாக படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் மகனை வைத்து எந்த படத்தை இயக்கினார் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். தனுஷ் ஏற்கனவே இயக்கி முடித்திருப்பது ராயன் படம். அதேபோன்று தற்போது இயக்கிக் கொண்டிருப்பது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம். இதில் ராயன் படம் தனுஷின் ஐம்பதாவது படமாக வெளியாக இருக்கிறது.

ராயன் படத்தில் தனுஷ் உடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன், சந்தீப் கிஷான், பிக்பாஸ் சரவணன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் யார் என்பது இன்று வரை அப்டேட் செய்யப்படாமல் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் ராயன் படத்தில் தனுஷின் மகனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேரனுமான யாத்ரா ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.

Also Read:12 ஏக்கர் நிலத்தை பதிவு செய்து தியாகம் செய்த ரஜினி.. அரசியல் கட்சிகளை வாயடைக்க வைத்த சம்பவம்

Trending News