வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

கோபியை உதறிய அம்மா.. பாக்கியலட்சுமி சீரியலில் வெடிக்கும் அடுத்த பிரச்சினை

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பக்கவாதம் ஏற்பட்ட தாத்தாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக பிசியோதெரபி ரஜினி, பாக்யா வீட்டிற்கு வந்து செல்கிறார். இவர் மீது இனம்புரியாத கவர்ச்சி பாக்யாவின் மகள் இனியாவிற்கு ஏற்படுவதால், ரஜினியிடம் வழிந்து பேசும் இனியாவை பாக்யா அடித்து கண்டிக்கிறார்.

இதை கோபியிடம் அழுதுகொண்டே இனியா சொல்கிறார். அதன் பிறகு கோபி பாக்யாவை இனிமேல் சமைப்பதை விட்டுவிட்டு வீட்டில் இருக்கும் டீனேஜ் மகள் இனியா மீது கவனம் செலுத்து என திட்டுகிறான். அதுமட்டுமின்றி சமைப்பதினால் கிடைக்கும் பத்து இருபது பணத்தை வைத்து, அப்படி வீட்டிற்கு என்னதான் செய்கிறாய் என கேள்வி எழுப்புகிறான்.

நான் அப்பாவிற்காக லட்சக்கணக்கில் பணம் செலவு செய்கிறேன். நீ என்னதான் இந்த வீட்டிற்காக செய்கிறாய் என கேட்டதும் பாக்யா, ‘கடந்த மாதம் 8000 ரூபாய் கரண்ட் பில் வந்தது. அத்துடன் வாராவாரம் மாமாவிற்கு ஆயிரக்கணக்கில் மருந்து மாத்திரையும் சிகிச்சைக்கு பிசியோதெரபி வந்து செல்வதால் அவருக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாயும் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்’ என ஆக்ரோஷத்தில் கோபியின் பேச்சு தாங்க முடியாமல் பாக்யா ஆதங்கத்துடன் பேசுகிறாள்.

இதையெல்லாம் கோபியின் அம்மா கேட்டுக்கொண்டு மனம் வருத்தப்பட்டுப் பாக்யாவிடம், ‘இந்த வீட்டிற்காக நீ எவ்வளவு கஷ்டப் படுகிறாய். இதை பயன்படுத்திக் கொள்!’ என தன்னுடைய தங்க நகை பெட்டிகளை கொண்டு வந்து பாக்யாவிடம் கோபியின் அம்மா கொடுக்கிறார்.

அந்த சமயத்தில் கோபியை விட பாக்யா தங்களை நன்றாக பார்த்துக் கொள்கிறார் என்ற எண்ணம் கோபியின் அம்மாவிற்கு வந்திருக்கிறது. மேலும் மகனிடம் நகையை கொடுக்காமல் மருமகள் பாக்யாவிடம் நகையை கொடுத்து, கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் கோபிக்கு பாக்யாவின் அம்மா சவுக்கடி கொடுத்து விட்டார்.

இதன்பிறகு கோபியின் அப்பாவுடன் அம்மாவும் சேர்ந்து பாக்யாவிற்கு உறு துணையாக நிற்பது இனி வரும் நாட்களில் பாக்யாவை விட்டு கோபி பிரிந்தாலும் வீட்டில் பாக்யாவிற்கு ஆதரவு அதிகமாக இருப்பதால் அதை எளிதாக கடந்து செல்வார்.

Trending News