திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அடுத்த கவின், லாஸ்லியா இவங்கதான்.. புருஷன், பொண்டாட்டியா தான் வெளியில போவாங்க போல

பிக் பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழை விட மற்ற மொழிகளில் சில மோசமான சம்பவங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் பிக் பாஸ் தொடங்கி முதல் சீசனில் இருந்தே ஏதாவது ஒரு காதல் டிராக் இடம்பெறும். ஏனென்றால் அங்கு உள்ள மன உளைச்சலில் வேறு வழியில்லாமல் ஒருவரின் அன்பை சிலர் தேடுகிறார்கள்.

பிக் பாஸ் சீசனங்களில் அதிக சர்ச்சையை உண்டாக்கியது கவின், லாஸ்லியா காதல் தான். இவர்கள் இருவரும் அப்போது காதலிப்பதாக ஒற்றுக்கொண்டனர். ஆனால் வெளியில் வந்து படங்களில் நடித்த பின்பு அங்குள்ள சூழ்நிலையால் நாங்கள் இருவரும் காதலித்தது உண்மைதான், ஆனால் இப்போது பிரேக் அப் ஆகிவிட்டது என கூறினார்கள்.

Also Read :பிக் பாஸ்க்கு வந்து பெயரை கெடுத்துக்க போகும் பிரபலம்.. அடுத்த லாஸ்லியா இவங்கதான்

அதைத்தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 5வில் அமிர், பாவனி இருவரும் காதலித்தனர். இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகும் தங்களது காதலை தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் சரவணன் மீனாட்சி புகழ் ரட்சிதாவுக்கு நூல் விட்டு வருகிறார்.

ஏற்கனவே இவர்களது காதல் ட்ராக் உறுதியான நிலையில் நேற்றைய எபிசோடில் காதல் கொஞ்சம் துக்களாக இருந்தது. அதாவது வெளியில் இத்தனை நாள் கஞ்சி தான் குடித்தேன், இப்போது ரட்சிதா சமையல் டீமுக்கு வந்ததால் விதவிதமாக சாப்பிட போகிறேன் என ராபர்ட் கூறினார்.

Also Read :கிளாமர் ஹீரோயின்களுக்கே சவால் விடும் ரட்சிதா.. பிக்பாஸ் மேடையில் போட்ட கவர்ச்சி ஆட்டம்

இதை ரட்சிதா வேறு விதமாக புரிந்து கொண்டு சமையல் செய்ய நேரமாகும், நீங்க கஞ்சையை குடிங்க என கூறினார். இதனால் ராபர்ட் மாஸ்டர் கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் இருந்தார். அதன் பின்பு கரிசனமாக ரட்சிதா இனிமேல் சாப்பாடு மீது கோபம் காட்டக்கூடாது என ராபர்ட் மாஸ்டரிடம் பேசினார்.

பிக் பாஸ் வீட்டில் எல்லோரிடமுமே ரட்சிதா இது போன்று தான் பழகி வருகிறார். ஆனால் ராபர்ட் மாஸ்டர் தன்னிடம் கூடுதல் அக்கறை காண்பிப்பதாக நினைத்துக் கொண்டு ரக்ஷிதா மீது ஈர்ப்படைந்துள்ளார். முதல் நாளில் இருந்து ரக்ஷிதா மீது கண் வைத்துள்ள ராபர்ட் மாஸ்டர் கடைசியில் அவரை கரெக்ட் செய்து புருஷன் பொண்டாட்டியாக தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் போல.

Also Read :மகளை பற்றிய உருகிய ராபர்ட் மாஸ்டர்.. அத்தனையும் பொய் என ஆதாரத்தை காட்டும் நெட்டிசன்கள்

Trending News