கோபியின் குடும்பத்தில் நடக்க போகும் கொலை.. நிலைகுலைந்து போன பாக்கியலட்சுமி குடும்பம்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் மகனின் கள்ளக்காதலை ஆரம்பத்திலிருந்தே தெரிந்துகொண்ட கோபியின் அப்பா ராமமூர்த்திக்கு எதிர்பாராத விதமாய் பக்கவாதம் ஏற்பட்டு விட்டது. இதனால் கோபியின் நடவடிக்கைகளை மாற்ற முடியாமலும், அதற்கு உடல் ஒத்துழைப்பு கொடுக்காததால் விரக்தியில் இருந்த ராமமூர்த்தி முன்பு, கோபி வந்ததும் வெறி கொண்ட ராமமூர்த்தி கண்டபடி கத்துகிறார்.

இருப்பினும் அவருடைய பேச்சு புரியாததால், கோபி திரு திருவென முழித்துக் கொண்டு இருக்கிறான். ஒருகட்டத்தில் ராமமூர்த்தி பாக்யாவிற்கு துரோகம் செய்யும் கோபியை கொன்றுவிட முடிவெடுத்து அவனுடைய கழுத்தை பிடித்து நெருங்குகிறார்.

விட்டா கொன்று விடுவார் என பயந்த கோபி, ராமமூர்த்தியை தள்ளி விடுகிறான். பிறகு விழ போன ராமமூர்த்தியை பிடித்து உட்கார வைத்த கோபியை, மீண்டும் ராமமூர்த்தி தன்னுடைய உச்சக்கட்ட கோபத்தை காட்ட முயற்சி செய்கிறார்.

அவரிடமிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று கோபி அந்த இடத்தைவிட்டு வேகமாக ஓடி தன்னுடைய ரூமில் அமர்ந்து கொள்கிறான். இவ்வாறு கோபியின் மீது இருக்கும் கோபத்தை எப்படி காட்டுவது எனத் தெரியாமலும் அவனைப் பற்றிய உண்மையை வீட்டில் இருப்பவர்களுக்கு சொல்ல முடியாமலும் ராமமூர்த்தி பரிதவிக்கும் நிலைமை பார்ப்பதற்கே கஷ்டமாக உள்ளது.

ஆனால் சுயநலமாகவே சிந்திக்கும் கோபி, பாக்யாவை விட்டு நிரந்தரமாக பிரிந்து செல்லத் துணிந்தது மட்டுமல்லாமல் தன் கூடவே தன்னுடைய மகள் இனியாவையும் அழைத்து செல்லப் போகிறான்.

இனியாவும் அம்மாவின் முக்கியத்துவத்தை உணராமல் பொறுப்பில்லாத அப்பாவையே தூக்கி வைத்து பேசுவது சீரியல் ரசிகர்களிடையே வெறுப்பை சம்பாதிக்கிறார். இருப்பினும் ஒரு கட்டத்தில் இனியா, பாக்யாவின் அருமையை புரிந்து கொள்ளும் காலமும் வெகு சீக்கிரம் வரப்போகிறது.