ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

4 பேரோட வாழ்க்கையும் நாசமா போச்சே.. ஜீவா-காவியா காதல் விஷயத்தை தெரிந்த அடுத்த நபர்!

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் உயிருக்கு உயிராக காதலித்த ஜீவா-காவியா இருவரையும் பிரித்து ஜீவாவை காவியாவின் அக்கா பிரியாவுக்கும், காவியாவை ஜீவாவின் அண்ணன் பார்த்திபனுக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். ஒரே வீட்டிலேயே காதலர்களாக இருந்த ஜீவா-காவியா இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை மனதார ஏற்று வாழ முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னிலையில் ஜீவா, காவியாவின் காதல் விஷயம் ஏற்கனவே காவியாவின் அம்மாவிற்கு தெரிந்த நிலையில், தற்போது ஜீவா வீட்டில் இருக்கும் ஒரு நபருக்கும் தெரியவந்துள்ளது. அதாவது ஜீவா, காவியா சம்பந்தப்பட்ட பொருட்களை எல்லாம் வைத்திருக்கும் அறையில் இருக்கும் முக்கியமான ஆவணத்தைத் எடுப்பதற்காக பார்த்திபன் மற்றும் அவனுடைய மாமா லிங்கா இருவரும் ஜீவாவின் ரூமை திறக்க முயற்சிக்கின்றனர்.

அந்த ஆவணம் முக்கியமானது என்பதால் ஜீவாவிற்கு தொலைபேசி மூலம் அழைத்து சாவியை கொண்டுவரும்படி சொல்கின்றனர். இதன்பிறகு லிங்காவிற்கு அந்த அறையின் சாவி கிடைக்க, அறையை திறந்து உள்ளே போய் பார்த்தால், ஜீவா-காவியா இருவரும் உயிருக்கு உயிராக காதலித்த விஷயம் தெரியவருகிறது.

இதனால் உடைந்து போன லிங்கா, காவியாவின் கணவர் பார்த்திபனுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிய கூடாது எனக் வேகவேகமாக அந்த ரூமில் இருக்கும் ஆவணத்தை எடுத்து பார்த்திபன் கையில் கொடுத்து, அந்த இடத்தை விட்டு கிளப்பி விடுகின்றான். அதன் பிறகு வரும் ஜீவாவிடம், லிங்கா காவியாவை காதலித்ததை ஏன் சொல்லலை என்று வருத்தப்படுகிறார்.

இப்படி 4 பேரின் வாழ்க்கையும் நாசமா போச்சே, எப்படி இதையெல்லாம் மறந்து வாழப் போகிறீர்கள் என மன வருத்தம் அடைகிறான். அதன் பிறகு ஜீவா, ‘நான் காவியாவை மறந்து பிரியாவுடன் வாழ முயற்சிக்கிறேன். இதெல்லாம் முடிந்த கதை’ என லிங்காவிடம் சொல்ல, அந்த கெஸ்ட் ஹவுஸில் இருக்கும் காவியாவின் புகைப்படம் மற்றும் பரிசுப் பொருள்கள் அனைத்தையும் லிங்கா ஜீவாவின் கண்முன்னே எரித்து சாம்பலாக்குகிறான்.

இதைப் பார்த்து ஜீவா தன்னுடைய காதல் அழிகிறதே என கண்ணீர் வடிக்கிறார். இதைப் பார்க்கும்போது சீரியல் ரசிகர்களையும் கலங்கடிக்கிறது. என்னதான் ஜீவா பிரியாவுடன் வாழ முயற்சித்தாலும், காவியா பார்த்திபனை கொஞ்சம்கூட ஏற்று தயாராகவில்லை. அவனை எப்படியாவது விவாகரத்து செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இருப்பதால், இனி வரும் நாட்களில் ஜீவா-பிரியா ஜோடி சந்தோசமாக வாழ துவங்கினால் அதை பார்க்க முடியாத காவியா நிச்சயம் அவர்களது வாழ்க்கை வில்லியாகவே மாறுவாள்.

Trending News