வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

அட்லியை சுத்தி சுத்தி அடிக்கும் பாலிவுட் சினிமா.. ஜவான் பட ரிலீசுக்கு வந்த அடுத்த சிக்கல்

வெற்றி திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் காப்பி இயக்குனர் என்று கலாய்க்கப்பட்டு வரும் அட்லி தற்போது பாலிவுட் பக்கம் நடையை கட்டியுள்ளார். அங்கு ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி போன்ற டாப் நட்சத்திரங்களை வைத்து ஜவான் திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார். வருட கணக்கில் இழுத்துக் கொண்டே போன அந்த திரைப்படம் இந்த வருடம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஜூன் 2ம் தேதி வெளியாக இருந்த இந்த திரைப்படத்தின் ரிலீஸில் தற்போது ஒரு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது படத்தின் படப்பிடிப்பு சில பல தடைகளை தாண்டி தற்போது முடிவுறும் நிலையில் இருக்கிறது. சமீபத்தில் கூட நயன்தாரா இதன் படப்பிடிப்பிற்காக மும்பை சென்று அங்கேயே தங்கியிருந்து ஷூட்டிங்கை முடித்து கொடுத்துவிட்டு வந்தார்.

Also read: பாலிவுட் போயும் வேலையை காட்டிய அட்லி.. ரஜினி ஸ்டைலில் சண்டை போட்ட ஷாருக்கான், லீக்கான காட்சிகள்

இப்படி சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும் இறுதி கட்ட பணிகளை முடிப்பதற்கு இன்னும் அதிக கால தாமதம் ஏற்படுமாம். அதை வைத்துப் பார்த்தால் தற்போது படம் சொன்ன தேதிக்குள் வெளிவருவது கஷ்டம் தான். மேலும் அட்லியும் இந்த விஷயத்தில் அவசரம் காட்டக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறாராம். ஏனென்றால் பட ரிலீசுக்கு முன்பே இது குறித்த பரபரப்பான பேச்சுக்கள் பாலிவுட்டில் அதிகமாக இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் இப்படத்தை வைத்து தான் அட்லியும் மிகப்பெரிய திட்டங்களை போட்டு வைத்துள்ளார். அதன் காரணமாகவே அவர் தாமதம் ஆனாலும் பரவாயில்லை படத்தை தரமாக முடித்து ரிலீஸ் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார். மேலும் தற்போது ரிலீஸ் தேதியை மாற்றி அறிவித்து விடலாம் என தயாரிப்பு தரப்பிடமும் அவர் ஆலோசனையும் நடத்தி வருகிறாராம்.

Also read: அட்லீ மேல் விழுந்த மொத்த பழி.. பதான் செய்த வேலையால் டார்ச்சர் கொடுக்கும் ஷாருக்கான்!

அந்த வகையில் ஜவான் திரைப்படம் ஜூன் மாதத்தில் இருந்து அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட இருக்கிறது. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வமான தேதி வெளிவரும் என்கிறது பாலிவுட் வட்டாரம். இந்த விவகாரம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் எந்த நேரத்தில் அவர் பாலிவுட் சென்றாரோ தெரியவில்லை பல பிரச்சினைகள் அவரை சுத்தி சுத்தி அடிக்கிறது. ஏற்கனவே அட்லி மீது நம்பிக்கை இல்லாமல் இருந்த ரசிகர்கள் இந்த விஷயத்தையும் கிண்டல் அடித்து வருகின்றனர். தற்போது இந்த விஷயம் பாலிவுட் திரையுலகில் சிறு புயலையும் வீசி இருக்கிறது.

Also read: பாலிவுட்டை தூக்கி நிறுத்தினாரா ஷாருக்கான்.? இணையத்தில் கொண்டாடும் பதான் பட ட்விட்டர் விமர்சனம்

Trending News