சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

அபசகுனங்களை முன்பே கணித்த இளையராஜா.. கார்த்திகை தீப திருநாளில் சூழ்ந்த இருள்

The omens that happened before the death of Music Director Ilaiyaraajas daughter bhavatharini கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் இந்த மரணத்தின் பிடியிலிருந்து யாவருமே தப்ப  முடிவதில்லை. தனக்கான வேதனையை கூட தாங்கிக் கொள்பவர்கள் தன்  குழந்தைகளுக்கு என்றால் கதறி துடிதுடித்து விடுகின்றனர். இதை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவின் நிலைமை மிகவும் கொடுமையானது தான்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி அவர்கள் கல்லீரல் புற்றுநோய் காரணமாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சையில் ஈடுபட்டு வந்த போது சிகிச்சை பலனளிக்காமல் திடீரென நிகழ்ந்த அவரது இறப்பு திரையுலகில் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

இளையராஜாவின் இசை வாரிசாக  பல படங்களில் தனது மென்மையான குரலால் வருடிய பவதாரணி அவர்கள் ராசையா என்ற படத்தின் மூலம் பாடகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளிவந்த மாநாடு படத்தின் மெகருஷைலா பாடலில், “மேகத்தின் மேலே உன்னோடு மிதந்து வந்தேன் தோழா” என்று பாடியவர் இன்று மேகத்தோடு மேகமாக கலந்து குடும்பத்தினரை சோகக்கடலில் ஆழ்த்தியுள்ளார்.

Also read: இளையராஜாவின் மகளுக்கு இருந்த தீராத மன வருத்தம்.. பவதாரிணி பற்றி பேசிய பயில்வான்

முன்பு ஒரு சமயம் நாதம் என் ஜீவனே பாடல் ரெக்கார்டிங் இன் போது அசுப வார்த்தை, அதாவது எதிர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தி பாடகி  ஜானகி அம்மாவை  பாட சொல்லி இருந்தார். அதற்குப்பின் ஜானகி அம்மாவின் கணவர் திடீரென இயற்கை எய்தினார். தான் அந்த வரியை வைத்ததுனாலையே இப்படி ஆகி இருக்குமோ என்று சங்கடப்பட்டாராம் இளையராஜா. அதற்குப் பின் இது போன்ற வார்த்தைகளை இளையராஜா தன் பாடலில் கையாண்டதே இல்லையாம்.

அது போல் ஆன்மீகத்தில் தீவிரமாக இருக்கும் இளையராஜாவுக்கு கடந்த ஒரு மாதமாக  பல விஷயங்கள் அபசகுனங்களாக நடந்துள்ளது. வருடா வருடம் எப்போதும் பண்ணைபுரத்துக்கு போய் அவரது அம்மா சின்னதாய்க்கு திதி கொடுப்பார். அது இந்த வருடம் தடையாகியதாம்.

அதேபோல் இளையராஜா, அவரது மனைவி ஜீவா அவர்களுக்கும் திதி கொடுக்க  முடியாமல் இருந்திருக்கிறார். எல்லாத்துக்கும் மேல் கார்த்திகை தீப திருநாளில் இளையராஜா வீடு இருள் சூழ்ந்து காணப்பட்டதாம். எப்பொழுதும் அவர் வீட்டில்  கார்த்திகை தீபம் அன்று ஜே! ஜே! என்று இருக்குமாம். ஆனால் இந்த வருடம்  வீட்டில் யாருமே இல்லையாம்.

இதை வீட்டில் நடக்கும்  அபசகுனங்களாக கணித்திருக்கிறார் இளையராஜா. அதற்குப் பின் தான் இடியாய் பவதாரணியின் கேன்சர் உறுதியாகி இறப்பு நிகழ்ந்திருக்கிறது. விவரிக்க முடியாத தந்தை மகள் பாசத்தை மௌன மொழியுடன், பிரியா விடை கொடுக்கும் இளையராஜாவை காலம் தான் தேற்ற வேண்டும்.

Also read: இளையராஜாவிடம் பாடுவதற்கு மறுத்த யேசுதாஸ்.. மனதை உருக்கும் அந்தப் பாடல்!

- Advertisement -spot_img

Trending News