சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

சிவாஜி இடத்தை நிரப்பிய ஒரே நடிகர்.. வெள்ளி விழா கொண்டாடிய கடைசி படம்

இணையதளம் மற்றும் ஓ டி டி இல்லாத காலத்தில் மக்களின் ஒரே பொழுது போக்கு சினிமா தான். பல படங்கள் வெளிவரும் திரையரங்கில் தொடர்ந்து ஒரு படம் மட்டுமே 25 வாரம் திரையில் ஓடினால் அவை வெள்ளிவிழா கண்ட படமாக கருதப்படும்.

இத்தகைய வெள்ளி விழா படங்களை கொடுத்தவர் தான் சிவாஜி. தன்னுடைய நடிப்பு திறமையால் நடிகர் திலகம் என்று பெயர் பெற்றவர். இவர் 300க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நிலையில் இவரின் முதல் படமான பராசக்தி வெள்ளி விழா கண்டது.

Also Read:இனி என் அகராதியில் தோல்விக்கே இடம் கிடையாது.. பிளாப் படத்திற்காக மீண்டும் ரிஸ்க் எடுக்கும் ரஜினி

சரியான திரைஅரங்கம் இல்லாத காலத்தில் வெளிநாட்டில் இவரது பராசக்தி படம் ஓடி வெற்றி கண்ட பெருமை சிவாஜியையே சேரும். மேலும் இவர் நடிப்பில் வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடிய படங்கள் பராசக்தி, பாசமலர் பாவமன்னிப்பு, திருவிளையாடல் ஆகிய எண்ணற்ற படங்களாகும்.

மேலும் இவரின் காலத்திற்கு பின்னர் இத்தகைய பெருமையை நம் சூப்பர் ஸ்டார் ரஜினி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனக்குரிய ஸ்டைலில் நடித்து வெளிவந்த படங்கள் பில்லா, படிக்காதவன்,  மனிதன், தங்கமகன் ஆகிய படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது.

Also Read:அந்த விஷயத்தில் கட்டன் ரைட்டாக இருக்கும் ரஜினி.. கமலுக்கு இருக்கும் தைரியம் சூப்பர் ஸ்டாருக்கு இல்ல

இவரின் வெள்ளி விழா கண்ட கடைசி படம் தான் கபாலி. இப்படத்தில் கபாலி டா என்ற வசனம் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒன்றாகும். மேலும் மக்களின் வரவேற்பை பெற்று இப்படம் 100 கோடி வசூலை அள்ளியது.

சிவாஜிக்கு பின்னர் இதுபோன்று பல ஹீரோக்கள் வெள்ளி விழா படங்களை கொடுத்திருந்தாலும் அதிக படங்களை தந்து ரஜினியே இவ்விடத்தை பிடித்திருக்கிறார். இவருக்கு பின்னால் இவ்விடத்திற்கு யார் வருவார் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே வெறும் கேள்வியாய் மாறி வருகிறது.

Also Read:நடிகர் திலகத்தின் கடைசி நிமிடங்கள் இப்படித்தான் இருந்தது.. மனம் உருகி பேசிய பிரபலம்

Trending News