செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

சத்யராஜ் இயக்கிய ஒரே படம் 125 நாள் ஓடி சாதனை.. தயாரிப்பாளராக கல்லா கட்ட முடியாத 3 படங்கள்

Actor Sathyaraj: சத்யராஜ் ஹீரோவாக நடித்து வந்த காலத்தில் நக்களுக்கும், நையாண்டிக்கும் மன்னராக அடாவடித்தனமான பேச்சுக்களை கொடுத்து சினிமாவில் இவருக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். ஆரம்பத்தில் வில்லனாக வந்தாலும் இவரிடம் இருந்த திறமையால் ஹீரோவாக மாறி கிட்டத்தட்ட 40 வருடங்களாக சினிமாவில் பயணித்து வருகிறார். அப்படிப்பட்ட இவர் தற்போது குணச்சித்திர நடிகராகவும் கலக்கிக் கொண்டு வருகிறார்.

இதற்கிடையில் ஹீரோவாக நடிக்கும் பொழுது இவருக்கு இருந்த பேரையும் புகழையும் வைத்து இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இறங்கி ஒரு கை பார்த்து விடலாம் என்று ஒரு சில படங்களில் பணிபுரிந்து இருக்கிறார். அதை பற்றி தற்போது நாம் பார்க்கலாம். அந்த வகையில் ஹீரோவாக நடித்து வந்த காலத்தில் 1995 ஆம் ஆண்டு வில்லாதி வில்லன் என்ற படத்தில் இயக்குனர், எழுத்தாளர், நடிகர் என்று இவருடைய முழு அர்ப்பணிப்பையும் கொடுத்திருக்கிறார்.

Also read: எனக்கு நீ போட்டியா.? இந்த 5 நடிகர்களை காலி செய்ய ரஜினி போட்ட மாஸ்டர் பிளான்.. நேக்காக கழண்ட சத்யராஜ்!

இப்படத்தில் சத்யராஜ் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து மாபெரும் வெற்றியை கொடுத்திருக்கிறார். இயக்குனராக இயக்கிய முதல் படத்திலேயே அதிக லாபத்தை சம்பாதித்து 125 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடி பாக்ஸ் ஆபிஸில் சாதனையை புரிந்து இருக்கிறார். அத்துடன் எனக்கு இந்த ஒரு மகிழ்ச்சியை போதும் என்று இந்தப் படத்துடன் இயக்குவதை விட்டுவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சினிமாவில் பயணித்து வந்த நேரத்தில் இவரது மகனும் ஹீரோவாக நுழைந்தார். அப்பொழுது பொறுப்பான அப்பாவாக தன் மகனை சினிமாவில் தூக்கி நிறுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக அவர் நடித்த மூன்று படங்களில் தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார்.

Also read: வாரிசு நடிகருக்காக சத்யராஜ் இறங்கி செய்த காரியம்.. பல வருடத்திற்கு பின்பு சம்பவம் செய்ய போகும் அம்மாவாசை

அப்படி இவர் தயாரித்த படங்களான லீ, நாய்கள் ஜாக்கிரதை, சத்தியா. இந்த மூன்று படங்களிலும் இவருடைய மகன் வித்தியாசமான நடிப்பை கொடுத்து ஹீரோ என்ற அங்கீகாரத்தை பெற்றார். இதில் லீ படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாததால் பாக்ஸ் ஆபிஸில் சராசரியான லாபத்தை மட்டும் பெற்றது. அடுத்ததாக சிபிராஜ் நடித்த நாய்கள் ஜாக்கிரதை படம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் சொல்லும்படியான லாபத்தை அடைய முடியவில்லை.

இதனை தொடர்ந்து சத்தியா படம் ஒரு திரில்லராக மர்மமான கதையை வைத்து எடுக்கப்பட்டு விறுவிறுப்பை காட்டிய படமாக வெளிவந்தது. ஆனாலும் இதில் அதிக அளவில் கல்லா கட்ட முடியாமல் போய்விட்டது. இருந்த போதிலும் சத்யராஜ் இது என் மகனுக்கு செய்ய வேண்டிய கடமை என்று இந்த மூன்று படங்களின் மூலம் சினிமாவில் அவரை தூக்கி விட்டிருக்கிறார்.

Also read: ஆல் ரவுண்டராக கலக்கி வந்த சத்யராஜ்.. ஒரே படத்தால் மொத்த வாய்ப்பையும் தட்டிச் சென்ற நடிகர்

Trending News