செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

11 இயக்குனர்கள் நடித்த ஒரே படம்.. விஜய் பட இயக்குனர் துணிந்து எடுக்கப் போகும் இரண்டாம் பாகம்

The only film starring 11 directors: ஒரு படம் வெற்றி அடைகிறது என்றால் அதற்கு ஹீரோக்களின் நடிப்பையும் தாண்டி இயக்குனர்கள் பங்களிப்பும் அதிகமாக இருக்கும். அந்த வகையில் கதை மற்றும் ஹீரோக்களை வழிநடத்தும் விதமும் சேர்ந்து வெற்றியைக் கொடுக்கும். அப்படிப்பட்ட இயக்குனர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் கண்டிப்பாக அவருடைய நடிப்பை பாராட்டக்கூடிய அளவிற்கு வெற்றிபெறும்.

அப்படித்தான் ஒரே படத்தில் கிட்டத்தட்ட 11 இயக்குனர்கள் இணைந்து நடித்து வெற்றியடைய செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட படத்தை எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க பார்க்க திகட்டாத அளவிற்கு குடும்பத்துடன் பார்த்துக் கழிக்கும்படியாக ஒரு உணர்வுபூர்வமான படமாக வெற்றி பெற்ற படம் தான் மாயாண்டி குடும்பத்தார். இப்படத்தை இயக்கியது ராசு மதுரவன்.

இதில் நடித்த அத்தனை பேருமே இயக்குனர்கள் தான். அவர்கள் யார் என்றால் தருண் கோபி, கேபி ஜெகன், சீமான் மற்றும் பொன்வண்ணன் இவர்கள் நான்கு பேருமே இயக்குனர்கள். இவர்களைத் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ரவி மரியா, நந்தா பெரியசாமி, மணிவண்ணன் மற்றும் மணிவண்ணனின் மருமகன்களாக நடித்த இளவரசு, ராஜ்கபூர், மற்றும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த சிங்கம் புலி இவர்கள் அனைவருமே இயக்குனர்கள் தான்.

Also read: விஜய்யை முதலமைச்சராக்க திட்டம் தீட்டிய விஜயகாந்த்.. சுக்கு நூறாக நொறுக்கிய பிரேமலதா

அதனாலயே என்னமோ ஒவ்வொருவருடைய நடிப்பும் யதார்த்தத்துக்கு பஞ்சமில்லாமல் தத்ரூபமான நடிப்பை கொடுத்து மக்கள் மனதில் சிறந்த ஒரு திரைப்படமாக வெற்றி பெற்றது. இந்த காலத்தில் இப்படி எல்லாம் மறுபடியும் பார்க்க முடியுமா என்பதை ஏங்க வைக்கும் அளவிற்கு குடும்பங்களை வைத்து அதனுடைய உறவுகளின் முக்கியத்துவத்தை கொடுத்து உணர்வுபூர்வமாக காட்டப்பட்டிருக்கும்.

அப்படிப்பட்ட இப்படத்தை மறுபடியும் இரண்டாம் பாகமாக உருவாகப் போகிறது. இதை எடுக்கப் போகிறது யார் என்றால் இப்படத்தில் மணிவண்ணனின் மகனாக நடித்த கேபி ஜெகன். இவர் ஏற்கனவே விஜய்யை வைத்து புதிய கீதை படத்தை எடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

அத்துடன் இவர் இயக்குனர் சேரனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார். அப்படிப்பட்ட இவருடைய இயக்கத்தில் உருவாக போகும் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் இரண்டாம் பாகம் குடும்பத்துடன் பார்த்து சந்தோஷப்படும் அளவிற்கு ஒரு சிறந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: ரஜினியை வம்புக்கு இழுத்து விஜய்யை அசிங்கப்படுத்திய கூட்டம்.. திரும்புற இடமெல்லாம் கன்னி வெடியா? எல்லாம் கர்மா bro

Trending News