திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஹவுஸ்ஃபுல் ஆகாத ரஜினியின் ஒரே படம்.. எழுந்த பின்னும் மீண்டும் கீழே விழுந்த சூப்பர் ஸ்டார்

Super Star Rajini: சமீப காலமாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்கள் 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனாலும் அவையெல்லாம் ஹவுஸ்புல் ஆகிவிடும். ஆனால் இப்போது அதற்கு எதிர்மாறாக நடந்துள்ளது. இதெல்லாம் அவருடைய வாரிசால் தான் என்று சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எரிச்சலடைகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ‘மொய்தின் பாய்’ என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்த லால் சலாம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ரஜினி ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரின் படமாகவே கொண்டாடுவார்கள், வசூலும் பிச்சுக்கிட்டு போகும் என்று படக்குழுவினர் மட்டுமல்ல ரஜினியும் நினைத்தார்.

ஆனால் இதுவரை அவர் நடித்த படத்திலேயே ஹவுஸ்ஃபுல் ஆகாத ஒரே படம் லால் சலாம் தான் என்ற பெயரை மட்டுமே சூப்பர் ஸ்டாருக்கு இந்த படம் பெற்றுத் தந்துள்ளது. ரஜினியின் லால் சலாம் படம் எந்த ஒரு தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் ஆகவில்லை. அந்த அளவிற்கு படம் செம மொக்கையா இருக்கு. முதல் நாள் கலெக்ஷன் கூட 50 கோடி தாண்டவில்லையாம், இதனால் ரஜினியின் பெயர் டோட்டலாவே டேமேஜ் ஆயிடுச்சு.

Also Read: அப்பாவுக்கு அடுத்து செக் இவருக்குத்தான்.. ரஜினி மகளிடம் சிக்கி கொண்ட முக்கிய ஹீரோ

ரஜினி படத்திற்கு இந்த நிலைமையா!

அதோடு சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அதிகம் இருக்கக்கூடிய அக்கட தேசமான கேரளாவில் லால் சலாம் படத்தின் முதல் நாள் வசூல் வெறும் 5 லட்சம் தானாம். இதையெல்லாம் கேட்டதும் சூப்பர் ஸ்டார் செம அப்செட் ஆகிவிட்டார். தற்போது 73 வயதாகும் சூப்பர் ஸ்டார் இன்னும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துவிட்டு ஓய்வு பெற நினைக்கிறார். அதற்குள் தன்னுடைய இரண்டு மகள்களையும் எப்படியாவது டாப் இயக்குனர்களாக பார்க்க நினைக்கிறார்.

ஆனால் ஏற்கனவே சௌந்தர்யா ரஜினிகாந்த் ரஜினியை வைத்து எடுத்த கோச்சடையான் படம் வசூலில் மண்ணைக் கவ்வியது. அதேபோல் இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த லால் சலாம் படத்திற்கும் தியேட்டரில் ஈ ஆடுது. இப்பதான் ரஜினி ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் கொஞ்சம் நிமிர்ந்து நின்றார், ஆனால் இப்போது மீண்டும் எழுந்த வேகத்திலேயே லால் சலாம் படத்தின் மூலம் மறுபடியும் கீழே விழுந்துட்டார். இதெல்லாம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தால் தான் என்று சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் வெறியேறி இருக்கின்றனர்.

Also Read: ஜான் ஏறுனா முழம் சறுக்குது.. நிம்மதியை தேடி இமயமலைக்கு போகும் சூப்பர் ஸ்டார்

Trending News