புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ரஜினி, ரம்யா கிருஷ்ணனுக்காக 11 டேக் எடுத்த KS ரவிக்குமார்.. 23 வருடம் கழித்து வெளிவந்த உண்மை

பல கமர்சியல் படங்களை எடுத்து ஹிட் கொடுத்தவர் கே எஸ் ரவிக்குமார். இவருடைய இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் படையப்பா.

இப்படத்தில் கதை, பாட்டு என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும், படையப்பா படம் வணிக ரீதியாக மிகப்பெரிய லாபத்தை ஈட்டியது. படையப்பா படம் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவருக்குமே திருப்புமுனையாக அமைந்தது.

இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் வில்லியாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சொல்லப்போனால் ஹீரோவை விட ஒரு படி மேலாக ரம்யா கிருஷ்ணன் அசத்தியிருப்பார். ரம்யா கிருஷ்ணனின் மாமா நடிகர் ஷோவுக்கு இவர் சினிமாவுக்கு வந்ததே பிடிக்கவில்லையாம்.

ஆனால் சோ படையப்பா படத்தை பார்த்துவிட்டு ரம்யா கிருஷ்ணனை கூப்பிட்டு பாராட்டினாராம். அந்த அளவுக்கு படையப்பா படம் ரம்யா கிருஷ்ணனுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. இப்படத்திற்கு பிறகு இவருக்கு பல படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம்.

இந்நிலையில் படையப்பா படத்தில் ஒரு ஊஞ்சல் காட்சி வரும். ரஜினி தன்னுடைய துண்டால் ஊஞ்சலை கீழே இறங்கி விடுவார். அந்தக் காட்சிகள் எடுக்கும்போது பத்துக்கும் மேற்பட்ட டேக்குகள் ரவிக்குமார் எடுத்துள்ளார். ஏனென்றால் அந்த காட்சி எடுக்கும்போது ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இருவரும் சிரித்து விடுவார்களாம்.

அதன் பிறகு பல போராட்டங்களுக்குப் பின் அந்த காட்சிகளை ஒருவழியாக எடுத்த முடித்தாராம் கேஎஸ் ரவிக்குமார். இதுபோன்று படையப்பா படத்தில் பல கலவரங்கள் நடந்து உள்ளது என சமீபத்திய பேட்டி ஒன்றில் கேஎஸ் ரவிக்குமார் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Trending News