புதன்கிழமை, ஜனவரி 15, 2025

GOAT படத்தில் விஜய் கொடுத்த வாய்ப்பு.. செகண்ட் இன்னிங்ஸில் கலைகட்ட போகும் ஸ்டார்

Vijay in GOAT: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது GOAT படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அத்துடன் மல்டி ஸ்டார் படமாக்க வேண்டும் என்பதினால் விஜய்யுடன் மைக் மோகன், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, பிரசாந்த், லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து பொங்கலை ஒட்டி GOAT படத்தின் போஸ்டர் வெளியானதில் விஜய்யுடன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் இருந்த ஒரு போஸ்டர் ரசிகர்களிடம் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வகையில் இவர்கள் அனைவரும் ஒரு கேங்காக இப்படத்தில் டிராவல் பண்ணப் போகிறார்கள். முக்கியமாக 90களில் இளசுகளின் மனதை கொள்ளையடித்த டாப் ஸ்டார் பிரசாந்த் இதில் இணைந்திருப்பது பலரையும் குஷி படுத்திருக்கிறது.

அதற்கு காரணம் அந்த காலத்தில் பிரசாந்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு மற்றும் அவருடைய படங்கள் மக்களிடம் அதிக அளவில் ரீச் ஆகி வெற்றி பெற்றுவிடும். அப்படிப்பட்டவருடைய நடிப்பையும் படத்தையும் இந்த காலத்தில் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் பலருக்கும் இருந்தது. அதனை சரி செய்யும் விதமாக GOAT படத்தில் விஜய்யின் நண்பராக முக்கியமான கதாபாத்திரத்தில் ரீ என்டரி கொடுத்துள்ளார்.

Also read: விஜய் அப்பா சொன்னதை ஏளனமாக எடுத்துக் கொண்ட லோகேஷ்.. அதுதான் மொத்தமா வச்சு செஞ்சுட்டாங்க

அத்துடன் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளில் விஜய்க்கு டஃப் கொடுக்கும் விதமாக பிரசாந்த் டான்ஸ் ஆடிய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பல ஆண்டுகளுக்குப் பின் மறுபடியும் பிரசாந்தின் டான்சை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அத்துடன் இவருடைய மார்க்கெட் ரசிகர்கள் அளவில் அதிகமானதால் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டு வருகிறது.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பதற்கேற்ப பல வருடங்களாக போராடி தவித்து வந்த பிரசாந்துக்கு GOAT படம் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சில தினங்களுக்கு முன் பிரசாந்த் திருச்செந்தூர் முருகன் கோவில் போன இடத்தில் செய்தியாளர்களை சந்தித்து இருக்கிறார். அப்பொழுது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுப்பதற்காக வந்ததாக கூறியிருக்கிறார்.

அடுத்து இவரிடம் GOAT படத்தின் அப்டேட்டுகள் பற்றி சில கேள்விகள் முன்வைக்கப்பட்டது. அதில் சூட்டிங் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து எனக்கு பட வாய்ப்புகளும் வருகிறது. இப்போதைக்கு 3படங்களில் கமிட்டாகி இருக்கிறேன். அதனால் இனி என்னை தொடர்ந்து பார்க்கலாம் என்று சொல்லி இருக்கிறார். ஆக மொத்தத்தில் இனி பிரசாந்த் செகண்ட் இன்னிங்ஸில் கலை கட்டப் போகிறார்.

Also read: அக்கட தேசத்தில் ஆதிக்கம் செய்யும் 5 நடிகர்கள்.. மார்க்கெட்டை எகிற வைத்து டாப்பில் ஜொலிக்கும் விஜய்

Trending News