செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நான் வளர்த்த கடா, கொடுத்ததை திங்கனும்.. அண்ணனுக்காக இறங்கிய சூர்யாவிற்கு இப்படி ஒரு நிலைமையா!

நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானார் சூர்யா. அதன்பின் சூர்யா பல படங்கள் நடித்தாலும். அவருக்குள் இருக்கும் நடிப்பு தூங்கிக்கொண்டே தான் இருந்தது. அதன்பின் எவ்வளவு மெனக்கெட்டு நடித்தாலும் சூர்யாவுக்கு எந்த ஒரு படமும் ஓடவே இல்லை.

இப்படி போய்க்கொண்டிருந்த சூர்யாவின் கேரியர் அவ்வளவுதான் என்ற நிலையில் இருந்தது. இப்போதுதான் சூர்யா, பாலாவின் நந்தா படத்தில் அறிமுகமாகிறார். இதிலிருந்து தான் அவருக்கு ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது.

Also Read : எவ்வளவுதான் நான் பொறுத்து போறது, உன் சங்காத்தமே வேண்டாம்.. பாலா வெளியிட்ட அறிக்கையால் அதிர்ச்சியில் சூர்யா

இந்த படத்தில் பழைய சூர்யாவை அப்படியே ஓரங்கட்டிவிட்டு ஒரு புதுவிதமான தோற்றத்தில் அவரை காட்டுகிறார் பாலா. அவருக்குள் தூங்கிக்கொண்டிருந்த நடிப்பு திறமையை வெளியே கொண்டு வர செய்து அவரை செதுக்குகிறார். அதன் பின் அடுத்தடுத்து சூர்யாவிற்கு நிறைய படங்கள் வரத் தொடங்குகிறது.

இந்நிலையில் அதே பாலாவுடன் பிதாமகன் படத்தில் கூட்டணி அமைக்கிறார். இதுவும் அவருக்கு ஜாக்பாட் போல் அமைந்தது. சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் ஒரு அண்ணன் தம்பி உறவு ஏற்படுகிறது. பாலா வீட்டு அனைத்து விழாக்களிலும் சூரிய குடும்பம் இல்லாமல் இருப்பது இல்லை. அதேபோல் சிவகுமார் வீட்டு பங்க்ஷன் அனைத்திற்கும்  பாலா ஒரு மூத்த மகன் போல் நிற்கிறார்.

Also Read : ஜெய் பீம் 2-க்கு தயாராகும் சூர்யா.. இயக்குனர் கொடுத்த சர்ப்ரைஸ்

அதனை தொடர்ந்து பாலாவிற்கு வருகிறது இறங்குமுகம், இங்கே ஆரம்பிக்கிறது பிரச்சினை பாலாவிற்கு சினிமா கேரியர் மட்டும் இல்லாமல் பர்சனல் வாழ்க்கையிலும் நிறைய அடி . பார்ப்பவர்கள் எல்லாம் இறக்கப்படும் அளவிற்கு அவருடைய நிலைமை மாறியது.

இப்போதுதான் வளர்த்துவிட்ட அண்ணனுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்று சூர்யா அவருடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பாலாவுக்கு ஒரு படம் பண்ண முன்வருகிறார். இப்போதும் பாலா தனது வேலையை காட்டுகிறார். எப்பொழுதுமே கதை விஷயத்தில் ரொம்ப குழம்பும் பாலா என்ன செய்வது என்று தெரியாமல் ஏதேதோ செய்ய ஆரம்பித்துவிட்டார். தம்பி சூரியாவிடமும் அதையே செய்கிறார். தொடர்ந்து இந்த மாதிரி டார்ச்சரை சூர்யா தினம்தோறும் அனுபவிக்கிறார். ஒரு கட்டத்தில் நமக்கு ஏன் இந்த வம்பு என்று சூர்யாவும் விலகுகிறார். இப்படித்தான் சூர்யா மற்றும் பாலா வணங்கான் படம் டிராப் ஆனது.

Also Read : ரத்தன் டாடா சூர்யா இல்லையா.. அதிர்ச்சி தகவலை கூறிய கே ஜி எஃப் பட நிறுவனம்

Trending News