திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

Pandian Stores 2: ராஜியின் அண்ணன் சொதப்பியதால் அவஸ்தைப்பட போகும் பாண்டியன் குடும்பம்.. ஹீரோயிசம் காட்டும் கதிர்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், சரவணன் மற்றும் தங்கமயிலின் கல்யாணம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பாட்டு கும்மாளம் என்று ஒரே ஆட்டம் பாட்டம் ஆகத்தான் பாண்டியன் குடும்பத்தார்கள் என்ஜாய் பண்ணி வருகிறார்கள். ஆனால் இதையெல்லாம் கெடுக்கும் விதமாக ராஜியின் அண்ணன் குமரவேலு தங்கமயிலை கடத்துவதற்கு பிளான் பண்ணி விட்டார்.

இதனால தங்க மயிலிடமிருந்து பாண்டியன் குடும்பம் எஸ்கேப் ஆகிவிடும் என்று நினைத்தால் குமரவேலு சொதப்பியதால் எல்லாம் வீணாகிவிட்டது. அதாவது தங்கமயிலை கடத்துவதற்கு மண்டபத்துக்குள் நுழைந்த குமரவேலுவின் ஆட்கள் தங்கமயிலுக்கு பதிலாக மீனா மற்றும் ராஜியை கடத்திட்டு போய் விட்டார்கள்.

ஓவர் குஷியில் இருக்கும் பாண்டியன்

கல்யாண பொண்ண கடத்த சொன்னா கல்யாணமான ரெண்டு பொண்ணுங்கள கடத்திட்டு போய்ட்டார்கள். கல்யாண பொண்ணுக்கும் கல்யாணம் ஆணா பெண்ணுக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு மக்கு ரவுடிகளை தான் குமரவேலு அனுப்பி இருக்கிறார். பிறகு கடத்தி வைத்திருக்கும் தங்க மயிலுவை பார்க்க வந்த குமரவேலுக்கு அதிர்ச்சியாகிவிட்டது.

ஆனால் இதற்கிடையில் ராஜி மற்றும் மீனாவை காணும் என்று மண்டபத்தில் இருப்பவர்கள் தேட ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் ராஜியை கண்டுபிடித்து கூட்டு வரும் ஹீரோவாக கதிர் களமிறங்க போகிறார். பிறகு ராஜி மீனாவை கண்டுபிடித்து மண்டபத்திற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார்.

இதனை தொடர்ந்து தங்கமயில் மற்றும் சரவணன் கல்யாணம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நடந்து முடிய போகிறது. ஆனால் இதன் பிறகு தான் பாண்டியன் குடும்பத்திற்கே பிரச்சனையாக போகிறது என்று கோமதியின் அண்ணனுக்கு புரிய வரப்போகிறது.

ஏனென்றால் தங்கமயில் மற்றும் அவருடைய குடும்பம் பொய்ப்பித்தலாட்டம் பண்ணி ஏமாற்றிய குடும்பம் என்று தெரிய வந்தால் பாண்டியனின் மச்சான்களுக்கு ரொம்பவே சந்தோசமாக இருக்கும். அத்துடன் தங்கமயில் அந்த குடும்பத்திற்கு போன பிறகு ஒற்றுமையாக இருக்கும் மீனா மற்றும் ராஜியை பிரித்து ஏதாவது கலகத்தை உண்டாக்கப் போகிறார். இது தெரியாமல் பாண்டியன் ஓவராக ஆட்டம் போட்டு வருகிறார்.

Trending News