ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

தங்கமயிலின் அப்பா சுயரூபத்தை தெரிந்து கொள்ள போகும் பாண்டியன் குடும்பம்.. சிக்க வைத்த ராஜியின் குடும்பம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயிலுக்கு பொய் சொல்லி கல்யாணத்தை பண்ணி வைத்த பிறகு பாண்டியன் குடும்பத்தில் ஒவ்வொரு நாளும் பயத்துடன் தங்கமயில் வாழ்ந்து வருகிறார். அதிலும் பட்டதாரி விஷயத்திலும், போலி நகை விஷயத்திலும் மாட்டி விடுவோமோ என்ற பயத்தில் இருந்த தங்கமயிலுக்கு அப்பா கொடுத்த ஐடியா இன்று இரவு யாருக்கும் தெரியாமல் உன்னுடைய வீட்டுக்கு வந்து போலி நகையையும் சர்டிபிகேட்டையும் எடுத்துட்டு போய் விடுகிறேன்.

உடனே நீ திருடன் வந்து திருடிட்டு போயிட்டான் என்று சொல்லி எல்லோரையும் நம்ப வைத்து விடு. அதோடு உன்னோட பிரச்சனையும் சரியாகிவிடும் என்று தங்கமயிலின் அப்பா சொல்லி இருந்தார். அதன்படி பாண்டியன் வீட்டிற்கு திருட வந்த தங்கமயிலின் அப்பாவை பழனிச்சாமி பார்த்து விடுகிறார். உடனே பழனிச்சாமிடம் இருந்து தப்பித்த தங்கமயிலின் அப்பா ராஜியின் வீட்டுக்கு பின்னாடி ஒளிந்து கொண்டார்.

பிறகு பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் திருடனை தேடிப் பார்த்த நிலையில் காணவில்லை என்று போய்விடுகிறார்கள். ஆனால் தங்கமயில் அப்பா, ராஜி வீட்டில் ஒளிந்து இருந்ததால் முத்துவேல் மற்றும் சக்திவேல் கண்டுபிடித்து விடுகிறார்கள். உடனே இவர் மூலமாக பாண்டியன் குடும்பத்தை அவமானப்படுத்த வேண்டும் என்று அங்கே இருந்த தூணில் தங்கமயில் அப்பாவை கட்டி வைத்து விடுகிறார்கள்.

பிறகு அதிகாலையில் கதிர் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் பொழுது தங்கமயிலின் அப்பாவின் நிலைமையை பார்த்து மாமா நீங்க எப்படி இங்கே என்று பதறி கேட்க ஆரம்பித்து விட்டார். உடனே குமரவேலு, சக்திவேல் மற்றும் முத்துவேல் என அனைவரும் வந்த நிலையில் இவர்தான் இரவு நேரத்தில் எங்கள் வீட்டில் திருட வந்த திருடன் என்று சொல்லி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துவிட்டார்.

ஆனால் தங்கமயில் அப்பா நான் திருட வரவில்லை என்று சொல்லிய பொழுது பாண்டியன் சந்தேகப்படாமல் நீங்கள் எங்க வீட்டுக்கு வாங்க பேசிக் கொள்ளலாம் என்று சொல்கிறார். ஆனால் ராஜியின் குடும்பம் அவரை விடாமல் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்து போலீசை வர வைத்து விட்டார்கள். அந்த வகையில் போலீஸ் வந்ததும் எதற்காக நீங்கள் இரவு நேரத்தில் இவர் வீட்டுக்கு போனீங்க என்று கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தங்கமயிலின் அப்பா இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்.

இதையெல்லாம் பார்த்த தங்கமயிலும் உண்மையை சொல்லவும் முடியாமல், சொல்லாமலும் இருக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். ஆக மொத்தத்தில் பொய்யும் பித்தலாட்டமும் பண்ணிய தங்கமயில் ரகசியம் தற்போது பாண்டியன் குடும்பத்தில் அனைவருக்கும் தெரியப் போகிறது. அந்த வகையில் வாழப் போற வீட்டில் பொய் சொல்லி சந்தோஷமாக வாழ்ந்து விடலாம் என்று தப்பு கணக்கு போட்ட பாக்கியத்திற்கு இது மிகப்பெரிய பாடமாக அமையப்போகிறது.

Trending News