விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குழந்தை இல்லாத பிரச்சினையை சரி செய்வதற்காக முல்லை கோயில் கோயிலாக ஏறி இறங்கி படும்பாட்டை பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தால் பார்க்க முடியவில்லை.
இதற்காக அவர்களிடம் பணமே இல்லாத போதிலும், 5 லட்ச ரூபாயை வெளியில் இருந்து கடன் வாங்கி, முல்லைக்கு தற்போது செயற்கை முறையில் கருத்தரிக்கும் சிகிச்சையை மேற்கொண்டு இருக்கின்றனர்.
எனவே அந்த சிகிச்சைக்குப் பிறகு முல்லை பக்குவமாக இருக்கவேண்டும் என்பதற்காக, அவளை ஒரு வேலையும் செய்ய விடாமல் படுத்த இடத்திலேயே அவள் கைக்கு சாப்பாடு முதற்கொண்டு அனைத்தையும் கதிர் கொண்டுவந்து தருகிறான்.
அதுமட்டுமின்றி ஒரு குழந்தையைப்போல் முல்லையை கதிர் பார்த்துக்கொள்வது வீட்டில் இருப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. ஏனென்றால் முல்லையை பாத்ரூமிற்கு கூட நடந்து செல்ல விடாமல் கதிரே தூக்கிக்கொண்டு செல்கிறான்.
இவ்வாறு முல்லைக்கு ஒரு குழந்தை தங்க வேண்டும் என்பதற்காக 5 லட்சம் செலவு செய்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் செய்த முயற்சி எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என வீட்டில் இருப்பவர்களும் உறுதுணையாக நிற்கின்றனர். இருப்பினும் இந்த சிகிச்சை ஒரு சிலருக்கு முதல் முறையே வெற்றியை தரும்.
அப்படி இல்லையென்றால் அடுத்தடுத்த முறை இதே சிகிச்சையை மேற்கொண்டால் ஒவ்வொரு முறையும் 5 லட்சம் செலவு செய்ய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தார் முடியாது. ஆகையால் முதல் முறையே முல்லைக்கு குழந்தை தங்க வேண்டும் என ரசிகர்கள் உட்பட பாண்டியன் ஸ்டோர் குடும்பமே விரும்புகிறது.
தற்போதைய தலைமுறைகள் குழந்தை பெறுவதற்கு என்று மருத்துவத்தை அணுகி 3, 4 வருடங்கள் காத்திருந்து பெற்றுக் கொள்கின்றனர், அது பெரும் கொடுமை தான். இதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கமே அதனை உணர்த்தும் விதமாக இந்த சீரியல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.