புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பாண்டியன் ஸ்டோர்ஸால் மீனா வாழ்க்கையில் ஏற்பட்ட சங்கடம்.. கணவரை பிரிகிறாரா ஹேமா.?

Vijay Tv : விஜய் டிவியில் இப்போது டிஆர்பியில் நல்ல ரேட்டிங் சென்று கொண்டிருக்கும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்த தொடரின் முதல் சீசனும் நன்றாக சென்றது. ஸ்டாலின், சுஜிதா, ஹேமா, வெங்கட் போன்ற பல நட்சத்திரங்கள் முதல் சீசனில் நடித்திருந்தனர். இந்த தொடர் முடிவுற்றவுடன் இரண்டாம் பாகத்தை கொண்டு வந்தனர்.

அதில் ஸ்டாலின் மற்றும் ஹேமா இருவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விலும் நடித்து வருகிறார்கள். அதோடு ஸ்டாலினின் மனைவியாக நடிகை நிரோஷா நடித்து வருகிறார். இந்நிலையில் மீனாவின் கணவராக முதல் சீசனில் நடித்த வெங்கட் சமீபத்தில் மீண்டும் இந்த தொடரில் என்ட்ரி கொடுத்திருந்தார்.

இவர்களது கெமிஸ்ட்ரி முதல் சீசனிலேயே நல்ல வரவேற்பை பெற்றது. தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் மீனா கதாபாத்திரத்தில் மூலம் பல ரசிகர்களை பெற்றிருக்கிறார் ஹேமா. அதோடு சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மீனா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

பாண்டியன் ஸ்டோர் தொடர் ஹேமா குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை

இதுதவிர யூடியூப் சேனல் தொடங்கி அதிலும் வீடியோக்கள் பதிவிட்டு வருகிறார். இந்த சூழலில் ஹேமா தனது கணவனை பிரிய உள்ளதாக ஒரு செய்தி உலாவி கொண்டிருக்கிறது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடருக்கான சூட்டிங் நேரம் அதிகமாக ஹேமா கொடுக்கிறாராம்.

இதனால் அவரது குடும்பத்திற்கான நேரத்தை ஒதுக்க முடியவில்லை. அதோடு சில நெருக்கமான காட்சிகளிலும் ஹேமா நடித்து வருவதால் அவரது கணவருக்கும் இவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி வீட்டில் பிரச்சனை ஏற்பட்ட இருவரும் பிரியப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது ஹேமா வெளிப்படையாக பேசினால் தான் தெரிய வரும். வேண்டுமென்றே சிலர் வதந்தியை கிளப்ப வேண்டும் என்பதற்காக கூட இவ்வாறு செய்திருக்கலாம். ஆனால் ஹேமா ரசிகர்கள் கணவருடன் அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று கூறிவருகிறார்கள்.

Trending News