Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியனின் மகன்களுக்கு கல்யாணம் ஆன நிலையில் மச்சானாக இருக்கும் பழனிவேலுக்கு வயசு ஆகி கொண்டே இருக்கிறது. ஆனால் கல்யாணம் ஆக மாட்டேங்குது என்ற வருத்தம் கோமதி அம்மாவுக்கு இருந்தது. அந்த வகையில் பாண்டியனிடம் என் பையனுக்கும் ஒரு நல்ல பொண் பார்த்து கல்யாணத்தை பண்ணி வைத்துவிடு என்று கேட்டுக் கொண்டார்.
அதன்படி பாண்டியன், குடும்பத்தில் இருப்பவர்களை கூப்பிட்டு பழனிவேலுக்கு ஏற்ற மாதிரி ஒரு பொண்ணு பார்த்து வைத்திருக்கிறேன். குடும்பம் மற்றும் பொண்ணு பற்றிய எல்லா விவரத்தையும் கேட்டுக் கொண்டேன். நம்ம குடும்பத்துடனும் ஒத்துப் போகும், பழனிவேலுக்கு ஏற்ற பெண்ணாக இருக்கிறாள் என்று பாண்டியன் சொல்கிறார். உடனே பழனிவேலு வெட்கப்பட ஆரம்பித்து விட்டார்.
அத்துடன் கதிர் செந்தில் மற்றும் சரவணன் அனைவரும் சேர்ந்து பழனிவேலுவை நக்கல் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். அத்துடன் நம் அனைவரும் சேர்ந்து குடும்பத்துடன் இன்றைக்கு பெண் பார்த்துட்டு வந்துவிடலாம் என சொல்கிறார். உடனே பழனிவேலு பொண்ணு பேரு என்ன, போட்டோ இருக்கிறதா என்று ஆர்வமாக கேட்க ஆரம்பித்து விட்டார்.
அதற்கு பாண்டியன், பொண்ணு பேரு மஞ்சுளா. போட்டோ வாங்கவில்லை அதுதான் நேரடியாகவே நம்ம போய் பார்க்க போறம் தானே, அதற்குள் உனக்கு என்ன அவசரம் என்று சொல்கிறார். ஆனால் இதில் ஒரு குழப்பம் ஏற்படப் போகிறது. அதாவது பழனிவேலுக்கு ஏற்ற பெண்ணை பாண்டியன் பார்த்து வைத்திருந்தாலும் அந்தப் பெண்ணுடன் பழனிவேலுக்கு கல்யாணம் நடக்கப்போவதில்லை.
அதாவது குமரவேலு பொறுத்தவரை பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க வேண்டும், நமக்கும் கல்யாணம் நடக்க வேண்டும் என்ற நினைப்பில் அரசியை எப்படியாவது கல்யாணம் பண்ண வேண்டும் என்று பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்து வருகிறார். அந்த வகையில் பழனிவேலுக்கு பொண்ணு பார்த்திருக்கும் விஷயத்தில் குமரவேலு ஏதாவது குட்டை குழப்பப் போகிறார். அதனால் அரசிக்கும் பழனிவேலுக்கும் கல்யாணம் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
அது மட்டுமில்லாமல் அரசிக்கும், பழனிவேலுவை கல்யாணம் பண்ண வேண்டும் என்ற ஒரு சின்ன ஆசை இருப்பது போல் தான் தெரிகிறது. ஏனென்றால் பாண்டியன் பொண்ணு பார்க்கும் விஷயத்தை சொன்னதும் அரசியின் முகம் கொஞ்சம் மாறிவிட்டது. ஒருவேளை குமரவேலுவிடமிருந்து அரசி தப்பிக்க வேண்டும் என்று பழனிவேலுடன் கல்யாணம் நடக்கலாம். ஆக மொத்தத்தில் பாண்டியன் ஏற்பாடு பண்ண போகும் இந்த கல்யாணத்தில் அரசி தலையெழுத்து மாறப்போகிறது.