திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ஷாலினியை திருமணம் செய்ய வேண்டாம் எனக் கூறிய பிரபலம்.. அஜித்தை பாட படுத்திய காதல்

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவரது புகைப்படங்கள் மற்றும் எந்த அப்டேட் ஆக இருந்தாலும் அஜித்தின் மேனேஜர் தான் வெளியிடுவார். அஜித் மற்றும் அவரது குடும்பம் எந்த சமூக வலைத்தள பக்கத்திலும் இல்லை.

இந்நிலையில் சில மாதங்களாக அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறது. நேற்று அஜித் மற்றும் ஷாலினி இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு அந்த புகைப்படங்கள் வைரல் ஆனது.

அஜித், ஷாலினி இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து இவர்கள் திருமணம் செய்துகொண்ட தற்போது வரை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் ஆரம்பத்தில் ஷாலினியை திருமணம் செய்து கொள்ள வேண்டாமென அஜித்திடம் அவருடைய நண்பர் ரமேஷ் கண்ணா கூறுகிறார். அமர்க்களம் படத்தின் சூட்டிங் செஞ்சிக்கோட்டையில் நடைபெற்ற போது அஜித், ஷாலினி இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

அப்போது அந்த படத்தில் ரமேஷ் கண்ணாவும் நடித்து இருந்தார். அப்போதுதான் அஜித்துக்கு ரமேஷ்கண்ணா அறிவுரை கூறியுள்ளார். அதாவது சினிமா வட்டாரத்தில் உள்ள இருவரும் திருமணம் செய்தால் யாராவது ஒன்றை விட்டுக் கொடுக்க வேண்டும்.

நடிகையை காதல் திருமணம் செய்ய வேண்டாமென அஜித்திடம் பலமுறை ரமேஷ்கண்ணா கூறியுள்ளார். ஆனால் அஜித், ஷாலினி மீது உள்ள அதீத காதலால் அவரை திருமணம் செய்துகொண்டார். இதனால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதால் ஷாலினி நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

Trending News