Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

ஸ்டாலினை எதிர்த்து வெற்றி பெற்றவர் இன்று இல்லை! தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு மறைவு

ஸ்டாலினை எதிர்த்து வெற்றி பெற்றவர் இன்று இல்லை! தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு மறைவு

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு உடல்நலக் குறைவால் இன்று (நவம்பர் 19) காலமானார். அவருக்கு வயது 75.சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், பிற்பகல் 2.24 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


1951ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த இவரது முழுப்பெயர் வி. சுந்தரம்பிள்ளை பாபு.அரசியல் வட்டாரத்தில் புரசை பாபு என்று அறியப்பட்ட இவர், வடசென்னை பகுதிகளில் நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவர். சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள சிங்காரப்பிள்ளை உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.


தனது அரசியல் பயணத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடங்கிய இவர்,வடசென்னை மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார்.


பின்னர் திமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி, 2016ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து அக்கட்சியில் பயணித்து வந்த இவர்,2026ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி அதிமுகவிலிருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.


2026 சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு,திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்கொண்டார்.இந்தத் தேர்தலில் 82,997 வாக்குகள் பெற்று 8,795வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி தீவிர நுரையீரல் தொற்று மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்து இன்று உயிரிழந்தார்.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.