Sirakadikkum Asai Serial: சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் அவர்களுடைய நடிப்பால் மக்களிடம் மிகவும் பிரபலம் ஆகி விடுவார்கள். அதன் மூலம் தொடர்ந்து அவர்கள் அடுத்தடுத்த வாய்ப்புகளை தக்க வைத்துக் கொள்வார்கள். அப்படித்தான் வெள்ளிதிரையில் ஹீரோயினாக வேண்டும் என்று கனவுடன் இருந்த சீரியல் நடிகை, சல்மா அருண் என்கிற ரோகிணிக்கு நடிக்கும் வாய்ப்பு எட்டவே இல்லை.
அதனால் குடும்ப வாழ்க்கையில் இணைந்து விடலாம் என்று கல்யாணம் செய்து கொண்டு குழந்தையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ஆரம்பித்து விட்டார். அந்த சமயத்தில் தான் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி முதலாவதாக நடித்த சீரியல் தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியல். இதில் அமுதாவின் அண்ணியாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதில் பெரிதளவில் பிரபலம் ஆகவில்லை என்றாலும் இரண்டாவதாக விஜய் டிவி சிறகடிக்கும் ஆசை சீரியலில் மூலம் தற்போது பிரபலமாகிவிட்டார். இவருடைய நடிப்புக்கு குறைய சொல்ல முடியாது அளவிற்கு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பிச்சு உதறுகிறார். அதனால் தான் இவருடைய நடிப்புக்கு கிடைத்த சன்மானமாக ஒவ்வொருவரும் திட்டி கொண்டு வருகிறார்கள்.
இதனால் தொடர்ந்து நெகடிவ் கமெண்ட்ஸ்களை பார்த்து வரும் ரோகிணி இதெல்லாம் என்னுடைய நடிப்புக்கு கிடைத்த பலன் தான். இதுதான் என்னை உற்சாகப்படுத்தி அடுத்த கட்ட லெவலுக்கு கொண்டு போகும் என்று தன்னம்பிக்கையுடன் பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட இவர் அடுத்ததாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலிலும் வில்லி கதாபாத்திரத்தில் வரப் போகிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இவருடைய நடிப்புக்கு கிடைத்த ஒரு பரிசாக ரோகிணி சம்பாதித்த அவருடைய சொந்த சம்பளத்திலிருந்து ஒரு புத்தம் புது காரை குடும்பத்துடன் சென்று வாங்கி இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். இவருடைய வளர்ச்சியை பார்த்த ரசிகர்கள் ரோகினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.