புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஆசையை தூண்டி அண்ணாச்சியிடம் உருவிய 300 கோடி.. வாய் கூசாமல் அவிழ்த்து விட்ட பிரபலம்

The Legent Annachi: தன்னுடைய மூளையை மட்டுமே மூலதனமாக நம்பி கஷ்டப்பட்டு வளர்ந்து பல போட்டிகளுக்கு நடுவில் இன்று தமிழ்நாட்டின் முக்கிய நிறுவனமாக மாறி உள்ளது சரவணா ஸ்டோர்ஸ். இதன் பிறகு கடையில் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தின் அதிபதியாக இருப்பவர் தான் சரவணன் அண்ணாச்சி. அப்படிப்பட்ட இவர் நடிக்க வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது.

உல்லாச படத்தை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்குனர்கள் தான் முக்கிய காரணம். இவர் எடுத்த உல்லாசம் மற்றும் விசில் படத்திற்கு பிறகு வேறு எந்த படங்களும் எடுக்கவில்லை. அந்த நேரத்தில் தொழிலை மட்டுமே கவனம் செலுத்தி முன்னுக்கு வந்துகிட்டு இருந்த லெஜெண்ட் அண்ணாச்சியின் ஆசையை தூண்டி விட்டது இவர்தான்.

Also read: பெரும் சோகத்தில் தி லெஜன்ட் சரவணன் அண்ணாச்சி.. நம்பி இருந்தவர்கள் கைவிட்ட அவலம்

சரவணா ஸ்டோர்ஸ் கடையின் விளம்பரத்திற்காக இந்த இயக்குனரை சந்தித்த நிலையில், அவர் கூறியது இந்த விளம்பரத்தில் வேறு ஒருவரை நடிக்க வைப்பதற்கு பதிலாக நீங்களே நடித்தால் இன்னும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் என்று அண்ணாச்சியின் ஆசையை தூண்டிவிடும் விதமாக பல ஆசை வார்த்தைகளை கூறி நடிக்க வைத்திருக்கிறார்.

இதன் மூலம் இவருடன் நடிப்பதற்கு பெரிய நடிகைகளை நடிக்க வைப்பதற்காக பல கோடிக்கணக்கான பணத்தை வாரி வழங்கியிருக்கிறார். இப்படியே பல வருடங்கள் போன நிலையில், அண்ணாச்சியின் வீக்னெஸ் பாயிண்டை புரிந்து கொண்டு, ஹீரோவாக நடிக்கலாம் என்று அந்த இயக்குனர்கள் இவருக்கு ஆசையை இன்னும் அதிகமாக தூண்டிவிட்டு இருக்கிறார்கள்.

Also read: அண்ணாச்சி தில்லா குறைத்த 30 வயது.. உல்டா பண்ணிய மாஸ் ஹீரோவின் கெட்டப்பை கண்டுபிடிச்சாச்சு

அண்ணாச்சியும் அந்த இயக்குனர்கள் பேச்சை நம்பி படத்தில் ஹீரோவாக நடித்தால் பேரும் புகழும் கிடைக்கலாம். அதை வைத்து இன்னும் பல கோடியே சம்பாதிக்கலாம் என்று கண்மூடித்தனமாக அந்த இயக்குனர்களை நம்பி ஹீரோவாக நடித்தார். ஆனால் இவர் ஹீரோவாக நடித்த பிறகு சந்தித்ததெல்லாம் கேலியும கிண்டலும் தான்.

ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தற்போது வரை கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கு மேல் இவரிடம் இருந்து மொத்தமாக உருவி விட்டார்கள். பணத்துக்கு பணமும் போய் இதுவரை சேர்த்து வைத்த கடையின் பெயரையும் மொத்தமாக காலி பண்ணி தற்போது அண்ணாச்சி அம்போன்னு நிற்பதாக பத்திரிக்கையாளர் பாண்டியன் ஒரு வீடியோவில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கூறியது அனைத்தும் உண்மை கிடையாது என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also read: அடுத்த மரண அடிக்கு ரெடியான லெஜெண்ட் அண்ணாச்சி.. மீசை, தாடி என மாறிப்போன வைரல் புகைப்படம்

Trending News