புதன்கிழமை, ஜனவரி 15, 2025

குடும்பத்தில் இடம் பிடிக்க மீனா போடும் திட்டம்.. பாண்டியனுக்கு மனசுல என்னமோ ஹிட்லர்னு நினைப்பு

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாசத்தைக் காட்டி மகன்களின் சந்தோஷத்தை கட்டி போட்டு இருக்கிறார் பாண்டியன். ஆனாலும் காதலியா அப்பாவா என்று வரும் பொழுது செந்தில் காதலை கைவிட மனசு இல்லாமல் மீனாவை கரம் பிடித்து விட்டார். இதற்கு காரணமாக இருந்த கதிரை பாண்டியன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டார்.

இந்த பிரச்சனை எல்லாம் தாண்டி மீனா செந்தில் எப்படியோ பாண்டியன் வீட்டிற்குள் புகுந்து விட்டார்கள். ஆனால் அங்கே இருக்கும் பாண்டியன் மற்றும் கோமதி, செந்தில் மீனாவை விரோதியாக பார்க்கிறார்கள். இதற்கிடையில் அரசி மீனாவிடம் பேசி உறவை நீடித்துக் கொள்கிறார். என்னதான் வீட்டுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக கல்யாணம் பண்ணி வந்தாலும் தற்போது இவருக்கு நடக்க வேண்டிய சம்பிரதாயம் நடக்கவில்லை.

அதாவது குடும்பத்தில் இருப்பவர்கள் மனசார நம்மளை ஏற்றுக்கொண்ட பிறகு சாந்தி முகூர்த்தத்தை வைத்துக் கொள்ளலாம் என்று செந்தில் மீனா முடிவெடுத்து விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் கதிரை எப்படியாவது வீட்டிற்கு கூடிய சீக்கிரம் கூட்டிவிட வேண்டும் என்று செந்தில் முடிவு பண்ணுகிறார். இதற்கு இடையில் மீனாவிடம் யாரும் முகம் கொடுத்து கூட பேச வில்லை.

Also read: ஈஸ்வரிக்கு பக்க பலமாக இருக்கும் ஜீவானந்தம்.. குணசேகரன் மூஞ்சில் கரியை பூச சூழ்ச்சியில் இறங்கிய தோழர்

இதனால் செந்திலிடம் நான் வேலைக்கு போகிறேன் என்று சொல்கிறார். அதற்கு செந்தில் என் அப்பா அம்மாவிடம் சொல்லிட்டு நீ எது வேணாலும் பண்ணு என்று சொல்கிறார். அடுத்தபடியாக எப்படியாவது குடும்பத்தில் இருப்பவர்களின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று மீனா ஒவ்வொருவரிடமும் பேசுகிறார். ஆனால் யாரும் இவரிடம் பேச தயாராக இல்லை. முக்கியமாக பாண்டியன் மீனாவை பார்த்து கத்தி கூச்சலிட்டு வெளியே போய் விடுகிறார்.

இதனால் விரக்தியான மீனா, மாமியாரிடம் எனக்கு இந்த வீட்டில் இருக்க என்னமோ மாதிரி இருக்கு என்று சொல்கிறார். உடனே இதுதான் சான்ஸ் என்று வந்த ஒரு நாளிலே உன்னால இந்த வீட்டிலே இருக்க முடியலன்னா நீ எதுக்கு கல்யாணம் பண்ணிட்டு வாரே என்று குத்தி காட்டி பேசுகிறார். அப்பொழுது மீனா நான் அந்த அர்த்தத்துல சொல்லல யாருமே என்னிடம் பேசவில்லை.

அதனால் எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது வேலைக்கு போகவா என்று கேட்க தான் நான் வந்தேன் என மாமியாரிடம் பெர்மிஷன் கேட்கிறார். இதற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் மௌனமாக இருக்கிறார். ஆனால் எப்படியும் மீனா வேலைக்குப் போகிறார் என்று தெரிந்து விட்டால் பாண்டியன் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார். இவர் வேலைக்கு போய் தான் இந்த வீட்டில சாப்பிடணும் எந்த அவசியமும் இல்லை என்று ஒரு ஹிட்லர் மாதிரி மீனாவுக்கு கண்டிஷன் போடப் போகிறார். அதன்பின் மீனாவின் ஆட்டம் ஆரம்பமாகப் போகிறது.

Also read: 2023ல் மாஸ் காட்டிய டாப் 5 சேனல்கள்.. முதல் இடத்திற்கு கடும் போட்டி போட்ட சன், விஜய் டிவி

Trending News