Election 2024: நாளை மறுநாள் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் கட்சித் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாகவே முக்கிய கட்சிகள் அனைத்தும் மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றன. அதில் சுயேச்சை வேட்பாளர்களும் ஒரு பக்கம் தீயாக வேலை செய்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து களத்தில் இறங்குகிறது. அதேபோன்றுதான் அதிமுக, தேமுதிக உள்ள கட்சிகளுடனும் பாஜக அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி போட்டு தேர்தலை சந்திக்கின்றன.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள்
ஆனால் நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்து போட்டியிடுகின்றனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து கட்சிகளும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த நிலையில் இன்று மாலை 6 மணியோடு அது முடிவுக்கு வருகிறது.
அதனால் இன்று தலைவர்கள் முக்கிய இடங்களில் வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் பாஜக மூன்றாவது முறையும் ஆட்சியை கைப்பற்றுமா என்ற ஒரு ஆவலும் ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் இந்த முறை தமிழகத்தில் பாஜகவின் கவனம் சற்று அதிகமாகவே உள்ளது. இப்படி ஒரு பரபரப்பு இருக்கும் சூழலில் தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி மாலை பிரச்சாரம் முடிந்த பிறகு யாரும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஓட்டு கேட்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.
மேலும் பிரச்சாரம் முடிந்ததும் வெளியூர் நபர்கள் அனைவரும் ஊரை விட்டு வெளியேற வேண்டும். அதேபோல் விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றிலும் யாரும் இல்லை என உறுதியளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.