திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பேசிப் பேசியே ஜீரோ ஆனவர் ரஜினி.. காட்டமாக விமர்சித்த பூ நடிகை, விஸ்வரூபம் எடுத்துள்ள பிரச்சனை

ஒருவர் புகழின் உச்சியில் இருந்தாலே சர்ச்சைகளும் தானாக அவரை தேடி வந்துவிடும். அப்படித்தான் உலக அளவில் பிரபலமாக இருக்கும் ரஜினியை சுற்றி ஏராளமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அவர் எது செய்தாலும், பேசினாலும் அதில் குற்றம் கண்டுபிடிப்பதற்கு என்று ஒரு கூட்டமும் இருக்கிறது. அப்படித்தான் இப்போது நடந்துள்ள ஒரு சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது ரஜினி சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய என்.டி.ஆரின் நூறாவது பிறந்தநாள் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்று இருந்தார். அப்போது பேசிய அவர் சந்திரபாபு நாயுடு குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். அதாவது அவர் ஒரு தீர்க்கதரிசி என்றும் அவரால்தான் ஹைதராபாத் ஹைடெக் சிட்டியாக இருக்கிறது என்றும் புகழ்ந்திருந்தார்.

Also read: 2023ல் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இந்திய சினிமாவை மிரட்டி விடப் போகும் 5 படங்கள்.. போட்டி வேண்டாம் என விலகிய கமல்

மேலும் என்.டி.ஆரின் ஆசீர்வாதம் அவருக்கு எப்போதும் இருக்கும் என்று தெரிவித்திருந்தார். இதைத்தான் இப்போது நடிகையும், ஆந்திர மந்திரியுமான ரோஜா கடுமையாக விமர்சித்து இருக்கிறார். அதாவது பேசிப் பேசியே ஜீரோ ஆனவர் தான் ரஜினி என்றும் எத்தனை பேர் சேர்ந்து வந்தாலும் ஆந்திர அரசியலை ஒன்றும் செய்ய முடியாது என்றும் காட்டமாக தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் என்.டி.ஆர்-ஐ கொலை செய்வதற்கு யார் திட்டம் போட்டார்கள் என்று அனைவருக்கும் தெரியும். அவரையே இப்போது நல்லவர் என்று ரஜினி கூறுவது முற்றிலும் தவறானது. சந்திரபாபு வீட்டில் சாப்பிட்டுவிட்டு அவர் எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்ட்டை அவர் அப்படியே படித்திருக்கிறார் என்று படுமோசமாக ரோஜா விமர்சித்திருக்கிறார்.

Also read: யானை இல்லை குதிரை என சூப்பர் ஸ்டார் நிரூபித்த படம்.. தொடர் தோல்விகளுக்கு பின் ரஜினியை தூக்கி நிறுத்திய இயக்குனர்

மேலும் மற்ற மாநிலங்களுக்கு செல்லும் போது அங்கு உள்ள நிலவரத்தை தெரிந்து கொண்டு நடிகர்கள் பேச வேண்டும். இல்லை என்றால் அமைதியாக இருந்துவிட வேண்டும் என்று அவர் பேசியதை பார்த்த ரஜினி ரசிகர்கள் இப்போது கொதித்து போய் இருக்கின்றனர். ரோஜா இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சோசியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவும் ரோஜாவின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது ரஜினி போன்ற தங்கமான இதயம் கொண்டவர் யாரும் கிடையாது. அவரின் குணத்தை விமர்சிப்பது வானத்தை நோக்கி எச்சில் துப்புவது போன்றது. அவர் மீது திட்டமிட்டு இது போன்ற அவதூறுகளை பரப்புகின்றனர். இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று கூறியிருக்கிறார். தற்போது ரோஜாவின் தாறுமாறான பேச்சு விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அவர் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Also read: சூப்பர் ஸ்டார் ஆசைப்பட்ட அந்த மூன்று விஷயம்.. வெளிப்படையாக எல்லா மேடைகளிலும் சொல்லும் ரஜினி

Trending News