Gossip: அந்த காதல் படத்தின் மூலம் பெரும் புகழை அடைந்த இளம் நடிகர் இப்போது ஒரு புகாரில் சிக்கி இருக்கிறார். பக்கத்து மாநிலத்தில் இளம் நடிகைகள் முதல் அம்மா நடிகைகள் வரை நடிகர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.
வாய்ப்பு தருகிறேன் என்று கூறி அத்துமீறலில் ஈடுபட்ட பல பிரபலங்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு வருகிறது. இதில் சில உண்மைகளும் இருக்கிறது. அதற்கு மாறாக தேவையில்லாமல் நடிகர்களை சிக்க வைக்க வேண்டும் என நடிகைகள் கிளம்பியுள்ளதாக ஒரு பேச்சும் உள்ளது.
சமீபத்தில் கூட பிரபல நடிகரின் மேல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆனால் இது முற்றிலும் பொய் என மறுத்து வரும் நடிகர் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கப் போவதாக தெரிவித்தார். இந்த நிலையில் காதல் நாயகனும் வசமாக சிக்கி இருக்கிறார்.
நடிகர் செய்த லீலை
இளம் பெண் ஒருவரிடம் ஹீரோயின் வாய்ப்பு தருவதாக கூறி இவர் அத்துமீறியதாக புகார் எழுந்துள்ளது. அதிலும் வெளிநாட்டிற்கு வரவழைத்து நடிகர் தன்னுடைய வேலையை காட்டி இருக்கிறார்.
இது இப்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நடிகர் தரப்பிலிருந்து இது பொய் என சொல்லப்படுகிறது. ஆனாலும் அடுத்தடுத்த நாட்களில் இந்த விவகாரம் சூடு பிடிக்கும் என்கிறது திரையுலக வட்டாரம்.
அடுத்தடுத்து புகாரில் சிக்கும் டாப் ஹீரோக்கள்
- நடிகையின் அக்காவையும் விட்டு வைக்காத கும்பல்
- நடிகைக்கு நேர்ந்த கொடூரம்
- பெரிய மனுஷன் போர்வையில் நடிகர் செய்த அசிங்கம்