வாரிசு நடிகருடன் நெருக்கம் காட்டும் விவாகரத்து நடிகை.. நைட் பார்ட்டியில் போட்ட ஆட்டம்

Gossip-1
Gossip-1

Gossip: விவாகரத்துக்கு பிறகு நான்கு எழுத்து நடிகை நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வந்தார். இடையில் சில தடைகள் வந்த போதும் தற்போது மீண்டும் களமிறங்கி உள்ளார்.

ஆனால் அவருக்கான வாய்ப்பு தான் கிடைக்கவில்லை. நடித்த படங்களும் தோல்வியை தழுவியது. இதனால் பாலிவுட் பக்கம் சென்றார் அம்மணி.

அங்கு நடிப்பிற்கு எல்லை கிடையாது என ஆஃபர் கொடுத்தும் கூட வாய்ப்புகள் வரவில்லை. அதனால் தற்போது நடிகை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடலாமா என்று யோசிக்கிறாராம்.

சமீபத்தில் முன்னாள் கணவர் ஒரு நடிகையை மணந்து கொண்டார். இதனால் நடிகை கொஞ்சம் வேதனையில் இருந்தது வெளிப்படையாக தெரிந்தது.

நைட் பார்ட்டியில் போட்ட ஆட்டம்

அதைத்தொடர்ந்து நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா என வாரிசு நடிகர் ஒருவரை பிக் அப் செய்து விட்டாராம். இருவரும் நெருங்கி பழகும் விஷயம்தான் இப்போது கிசு கிசுக்கப்பட்டு வருகிறது.

நடிகர் ஏற்கனவே ஒரு நடிகை உடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். தற்போது அவரை பிரிந்துள்ள நடிகர் விவாகரத்து நடிகையுடன் செட்டிலாக முடிவு செய்துவிட்டாராம்.

அது மட்டும் இன்றி நேற்றைய புத்தாண்டு கொண்டாட்டத்தில் இந்த ஜோடி நைட் பார்ட்டியில் செம ஆட்டம் போட்டுள்ளனர். இதனால் விரைவில் இவர்களின் திருமணம் செய்தி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Advertisement Amazon Prime Banner