திங்கட்கிழமை, மார்ச் 3, 2025

தனிமையில் தவிக்கும் ஹெட் நடிகரின் முன்னாள் காதலி.. ரீ என்ட்ரிக்கு வாய்ப்பு இருக்குமோ.?

Gossip: ஹெட் நடிகர் ஆரம்ப காலகட்டத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகையை உருகி உருகி காதலித்தார். இருவரும் டேட்டிங் செய்த விஷயங்கள் கூட மீடியாவில் பரவியது.

அதே சமயம் பாடி பில்டர் நடிகரும் இந்த நடிகையின் மேல் ஒரு கண் வைத்தார். இருவரும் இரண்டு படங்களில் சேர்ந்து நடித்த நிலையில் நெருக்கம் கூடி இருக்கிறது.

ஆனால் ஹெட் நடிகர் நடிகையை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார். இருவரும் இப்படி நடிகைக்காக போட்டி போட்டு வந்தது திரையுலகில் அரசல் புரசலாக பேசப்பட்டது.

தனிமையில் தவிக்கும் ஹெட் நடிகரின் முன்னாள் காதலி

ஆனால் நடிகையின் அம்மாவுக்கு இதில் சுத்தமாக விருப்பமில்லை. இதனால் நடிகையும் இந்த இருவரையும் கண்டுகொள்ளாமல் கழட்டிவிட்டார்.

அதன் பிறகு ஹெட் நடிகர் வேறு ஒரு நடிகையை திருமணம் செய்து கொண்டார். இந்த நடிகையும் சில வருடங்களில் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

ஆனால் ஒரு சில வருடங்களிலேயே கணவருடன் ஏற்பட்டால் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து பிரிந்தார். இப்போது நடிகை பல வருடங்களாக தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார்.

தற்போது ஆளே மாறி இருக்கும் இவர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவும் வாய்ப்பு இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. வெயிட்டான கேரக்டருக்காக நடிகை காத்துக் கொண்டிருக்கிறாரோ.

Trending News