சனிக்கிழமை, பிப்ரவரி 15, 2025

முன்னாள் கணவரை தொடர்ந்து வெறுப்பேற்றும் நடிகை.. எல்லாம் அந்த காண்டு தான்

Gossip: விவாகரத்துக்கு பிறகும் கூட அந்த நடிகை கணவரையே நினைத்து உருகி வருவதாக பேசப்பட்டது. ஆனால் இப்போது நடப்பதை பார்த்தால் வேறு மாதிரி தான் நினைக்கத் தோன்றுகிறது.

சில பல பிரச்சினைகளுக்கு பிறகு நடிகை மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் போட்டோ ஷூட்டிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

தற்போது பாலிவுட் பக்கம் மையம் கொண்டுள்ள இந்த நடிகை முன்னாள் கணவரை தொடர்ந்து வெறுப்பேற்றி வருகிறார். அந்த நடிகரோ இரண்டாவது திருமணமே செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

முன்னாள் கணவரை வெறுப்பேற்றும் நடிகை

ஆனால் நடிகை அந்த காண்டை பல்வேறு விதமாக வெளிப்படுத்தி வருகிறார். படங்களில் அதிகபட்ச தாராளம் காட்டுவது கூட இதனால் தான்.

இது எல்லாவற்றையும் விட நடிகை தனக்கு ஒரு காதலர் இருப்பது போல் சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டு வருகிறார். உண்மையில் அதெல்லாம் கிடையாது.

முன்னாள் கணவரை கடுப்பாக்கத்தான் இப்படி ஒரு வேலை பார்த்து வருகிறார் நடிகை. இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ என கோடம்பாக்கம் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

Trending News