வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

என் பொண்ண அவர் கூட நடிக்க விடமாட்டேன்.. தயாரிப்பாளரால் தனுஷ்க்கு நடந்த அவமானம்

நடிகர் தனுஷ் தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் நடிகர் தனுஷ் முதன்முதலாக தானே இயக்கி கதாநாயகனாக நடிக்க போகிறார் என்ற செய்தி சமீபத்தில் வைரலானது. இதனிடையே அப்படத்தின் கதாநாயகி தேர்வில் பிரபல தயாரிப்பாளர் முட்டுக்கட்டையாக உள்ளார்.

நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் செல்வராகவனின் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தான் இயக்க இருக்கும் படத்திற்காக கதாநாயகியை தேர்வு செய்து வரும் தனுஷ் பாலிவுட் நடிகை ஜான்வி கபூரை திரைப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்று யோசித்து உள்ளாராம்.

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே தன் அம்மாவைப் போல தமிழ் சினிமாவிலும் பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக ஜான்வி கபூர் தமிழில் வாய்ப்பு கிடைத்தால் நடிக்கலாம் என்ற எண்ணத்தில் உள்ளாராம்.

அதேபோல தயாரிப்பாளர் போனி கபூரும், ஜான்வி கபூரை தமிழில் அறிமுகம் செய்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனை தெரிந்து கொண்ட தனுஷ் தற்போது தான் இயக்கவிருக்கும் திரைப்படத்தின் கதாநாயகியாக ஜான்பி கபூரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறார். ஆனால் இதற்கு போனிகபூர் சம்மதிக்கவே இல்லையாம். ஏனென்றால் நடிகர் தனுஷ் சமீபத்தில் அவரது முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்திருந்தார்.

இதனையடுத்து ரஜினிகாந்திற்கும், தனுஷிற்கும் பல கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், தனுஷிற்கு திரைப்பட வாய்ப்புகள் சரிவர கிடைப்பது இல்லையாம். இதனை அறிந்து கொண்ட போனிகபூர் தன் மகளை தனுஷுடன் சேர்ந்து நடிக்க வைத்தால் ஜான்வி கபூரின் கெரியர் பாதிக்கப்படும் என்பதை அறிந்து தனுஷுடன் நடிக்க வைக்க முட்டுக்கட்டையாக உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் தனுஷ் நடித்த ஒரு சில திரைப்படங்களில் ஜான்வி கபூர் நடிக்க அதிக வாய்ப்புகள் இருந்தும் போனிகபூர் தனுஷுடன் தன் மகளை நடிக்க வைப்பதில் விருப்பம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே தனுஷ் தற்போது போனி கபூரின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.

Trending News