ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

முடிவுக்கு வருகிறது பிரபல சீரியல்.. 1400 எபிசோடுகளை கடந்து சாதனை

வெள்ளிதிரை பிரபலங்களை விட சின்னத்திரை பிரபலங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த நெருக்கமாக உள்ளனர். ஏனென்றால் அன்றாடம் சின்னத்திரை தொடர்களில் மூலம் தங்களது குடும்பத்தில் ஒருவராகவே ரசிகர்கள் அவர்களை பாவிக்கின்றனர். மேலும் ஒரு எபிசோடுகளை கூட தவற விடாமல் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் ஆரம்பத்தில் ஐந்து நாட்கள் ஒளிபரப்பாகி வந்த தொடர்கள் தற்போது சனிக்கிழமையும் சேர்த்து வாரத்திற்கு ஆறு நாட்கள் ஒளிபரப்பாகி வருகிறது. எந்த வேலையாக இருந்தாலும் மக்கள் அந்த சீரியல் நேரத்தை தவறவிடுவதில்லை. இந்நிலையில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பிரபல தொடர் ஒன்று முடிவுக்கு வரவுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. இத்தொடரின் ஆரம்பத்தில் ஷபானா மற்றும் கார்த்திக் ஜோடி பலரால் கவரப்பட்டு இருந்தது. அதிலும் ஆதி ஆக நடித்து வரும் கார்த்திக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர்.

அதன் பிறகு கார்த்திக் திரைப்படங்கள் மற்றும் வெப்சீரிஸ் இல் கவனம் செலுத்தி வந்ததால் இத்தொடரில் அவரால் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு வேறு ஒரு நடிகர் ஆதி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் பார்வதி கதாபாத்திரத்தில் ஷபானா மற்றும் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் பிரியா ராமனும் நடித்து வருகின்றனர்.

அதன்பிறகு செம்பருத்தி கதை களம் வெவ்வேறு பரிமாணங்களில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் செம்பருத்தி தொடர் 1400 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில தினங்களில் இத்தொடர் முடிவுக்கு வரவுள்ளது.

மேலும் செம்பருத்தி தொடரின் முடிவு சின்னத்திரை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இத்தொடரின் கிளைமாக்ஸை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தாலும் இத்தொடர் முடிகிறதே என்ற வருத்தத்தில் உள்ளனர்.

Trending News