புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

செம்பருத்தியை அடுத்து, டிஆர்பி இல்லாததால் ஊத்தி மூடப்படும் பிரபல சீரியல்!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் ஒருகாலத்தில் டாப் சீரியல்கள் லிஸ்டில் இருந்தது. அதன்பிறகு இந்த சீரியலில் இருந்து கதாநாயகன் விலகிய பிறகு டல் அடிக்கத் துவங்கியதால் டிஆர்பி-யில் பெரும் சரிவை சந்தித்திருக்கிறது.

இதனால் 1200 எபிசோடுக்கும் மேல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் விரைவில் வரப்போகிறது. இதைப்போன்று கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் மற்றொரு சீரியலும் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் தற்போது டிஆர்பி இல்லாததால் அந்த சீரியலை ஊத்தி மூட போகின்றனர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகை குஷ்பூ சின்னத்திரையில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மீரா என்ற என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த சீரியல் கடந்த மார்ச் 28 ஆம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

இதில் கதாநாயகியாக குஷ்பூ-வும், நடிகர் சுரேஷ் மேனன் நாயகனாகவும் நடித்து வருகிறார். பல வெற்றி படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் குஷ்புவின் தயாரிப்பு நிறுவனம் இந்த நாடகத்தைத் தயாரித்திருக்கிறது. இதில் மகப்பேறு மருத்துவராக இருக்கும் மீரா, கடந்த 16 ஆண்டுகளாக தனது கணவர் கிருஷ்ணாவிடம் இருந்து பிரிந்து வாழ்கிறார்.

மீரா தனது மகளுடன் வசிக்கிறார். அதே நேரத்தில் கிருஷ்ணா தனது மகனை கவனித்துக் கொள்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழும் கணவன் மனைவி இருவரும் ஒரே மருத்துவ மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். இது அவர்களை ஒன்றிணைக்குமா அல்லது அவர்களின் வாழ்க்கையை மேலும் சிக்கலாகும் என்பதுதான் இந்த நாடகத்தின் கதை.

மீரா சீரியலில் குஷ்புவை பார்ப்பதற்கு என்று ஆவலுடன் இருக்கும் ரசிகர்களுக்கு, சீரியலில் சுவாரஸ்யம் இல்லாததால் பிடிக்காமல் போய்விட்டது. இதனால் டிஆர்பி-யில் தொடர்ந்து பின்னடைவை சந்திப்பதால் சீரியலை முடித்துவிடலாம் என குஷ்பூ முடிவெடுத்திருக்கிறார்.

இதுகுறித்து சோசியல் மீடியாவிலும் குஷ்பூ, மீரா சீரியல் இந்த மாதம் முடிவடைய போகிறது என்று தெரிவித்திருக்கிறார். இதன் பிறகு அடுத்த சீரியலில் எப்போது நடிப்பீர்கள் என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு, ‘உடனே நடித்தால் நன்றாக இருக்காது. கொஞ்ச நாள் கழித்துதான் அதை பற்றி யோசிக்க வேண்டும். அதற்காக காத்திருக்கிறேன்’ என தெரிவித்திருக்கிறார்.

Trending News