திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சர்ச்சையை கிளப்பிய அஜித்தின் ரீல் மகள் போஸ்டர்.. இதைவிட கேவலமா விளம்பரப்படுத்த முடியாதா?

சோசியல் மீடியாக்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில் ஒரு படத்தை பிரமோஷன் செய்வதற்கு பலரும் பல்வேறு விதமான யுக்திகளை கையாளுகின்றனர். அதில் சில விஷயம் சர்ச்சையாக இருந்தாலும் ரசிகர்களை சென்றடைந்து விடுகிறது. ஆனால் ஒரு சில ப்ரோமோஷன் கேலிக்கூத்தாகி விடுகிறது.

அப்படித்தான் தற்போது அஜித்தின் ரீல் மகளான அனிகாவின் போஸ்டர் ஒன்று இணையதளத்தை கிடுகிடுக்க வைத்துள்ளது. குழந்தை நட்சத்திரமாக அஜித்தின் விஸ்வாசம், என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் தற்போது ஹீரோயினாக பிரமோஷன் அடைந்துள்ளார். அந்த வகையில் அனிகா இப்பொழுது மலையாளம், தெலுங்கு, தமிழ் என அனைத்து மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also read: அஜித் நிராகரித்த 5 பிரபலங்கள்.. அவமானப்படுத்தியதால் இன்று வரை வாய்ப்பு கொடுக்காத ஏ கே

அதற்கேற்றார் போல் நடனம் உள்ளிட்ட அனைத்திலும் ஆர்வம் காட்டி வரும் இவர் கிளாமராக நடிப்பதற்கும் தயக்கம் காட்டுவது கிடையாது. அதனாலேயே சோசியல் மீடியாவில் இவர் படு கிளாமரான போட்டோக்களை வெளியிட்டு வருவார். இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பல ரசிகர்கள் அவரை திட்டி தீர்ப்பார்கள்.

இப்படி சதா நேரமும் ஒரு சர்ச்சை வளையத்திற்குள் இருக்கும் அனிகா தற்போது அடுத்த பிரச்சனையில் சிக்கி இருக்கிறார். அதாவது தற்போது இவருடைய போட்டோ இடம்பெற்றுள்ள கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் செல்வி நந்தினி 16.7.2023 ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி அளவில் அகால மரணம் அடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Also read: சேரும் சகதியுமாக வந்த அஜித்.. யார், என்னனு தெரியாமல் அவமானப்படுத்தி அடாவடி செய்த ஹோட்டல் நிர்வாகம்

மேலும் இறுதி சடங்கு குறித்த தகவல்களும் அதில் இடம்பெற்று இருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ந்து போன பலரும் என்ன போஸ்டர் இது என்று சோசியல் மீடியாவில் கேள்விகளை எழுப்பி வந்தனர். ஆனால் சில புத்திசாலித்தனமான ரசிகர்கள் ஜூலை மாதம் வரவே இல்லை அதற்குள் இரங்கல் போஸ்டரா என்று சரியாக கேள்வி கேட்டனர்.

கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

anikha-poster
anikha-poster

அதை தொடர்ந்து தற்போது இந்த போஸ்டர் ஒரு படத்திற்காக ஒட்டப்பட்டது என்பது தெரிய வந்திருக்கிறது. இதனால் இந்த பரபரப்பு இப்போது ஓய்ந்து போயிருக்கிறது. இருப்பினும் இதைவிட கேவலமாக உங்களால் விளம்பரம் செய்ய முடியாதா என்ற கேள்விகளும் எழத் தவறவில்லை. அந்த வகையில் அஜித்தின் ரீல் மகள் இந்த ஒரு போஸ்டரால் இணையதளத்தையே அதிர வைத்து விட்டார்.

Also read: கமல், விஜய் படங்களும் இப்படி தான் எதிர்ப்பு கிளம்பியது.. தி கேரளா ஸ்டோரி படத்துக்கு வக்காலத்து வாங்கும் பிரபலம்

Trending News