புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சலார் படத்தின் ப்ரீ புக்கிங் கலெக்ஷன் மட்டுமே இத்தனை கோடியா.? வசூலில் தும்சம் செய்யும் பிரபாஸ்

Prabhas In Salaar: தற்போது தமிழ் சினிமாவில் எப்படி வாண்டெட் இயக்குனர் லிஸ்டில் லோகேஷ் பெயர் முதலிடம் இருக்கிறதோ, அதேபோல கன்னட சினிமாவில் கேஜிஎஃப் படத்தை எடுத்ததன் மூலம் அதிக கவனத்தைப் பெற்ற இயக்குனர் பிரசாந்த் நீல். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாகுபலி பிரபாஸை வைத்து சலார் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்.

மேலும் பிரபாஸுக்கும், பாகுபலி படத்திற்கு பின் எந்த படமும் பெருசாக சொல்லும் படியாக வெற்றி அடையவில்லை. அதனால் சலார் படத்தை தான் முழுவதுமாக நம்பிக் கொண்டு இருக்கிறார். அந்த வகையில் இவர்களுடைய கூட்டணி எப்படி இருக்கிறது என்ற விஷயம் நாளைக்கு அனைவருக்கும் தெரிந்து விடும். காரணம் இப்படம் நாளை கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் அனைத்து திரையரங்களிலும் ரிலீஸ் ஆகப்போகிறது.

அத்துடன் இப்படத்தை கர்நாடகாவில் உள்ள ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் 270 கோடி பட்ஜெட் அளவில் தயாரித்து இருக்கிறது. இப்படத்தில் பிரித்விராஜ், சுருதிஹாசன், ஜெகபதிபாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கும் பொழுது பாகுபலி படத்தையும், கேஜிஎஃப் படத்தையும் ஞாபகப்படுத்தும் அளவிற்கு காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

Also read: ரிலீஸ் தேதியுடன் வெளியான சலார் பட புது ட்ரெய்லர்.. வரலாற்றை திருப்பி போடும் ரெண்டு நண்பர்கள்

மேலும் இப்படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டிருக்கிறது. காரணம் வன்முறை நிறைந்த காட்சிகள் அதிகமாக இருப்பதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்ப்பதற்கு அனுமதி கிடைத்திருக்கிறது. அதற்கு காரணம் இப்படத்தின் மீது இருக்கும் அதீத நம்பிக்கை இருப்பதால் ஏ சர்டிபிகேட் கொடுத்தாலும் படம் வெற்றி அடையும் என்று நினைக்கிறார்கள்.

அதற்கேற்ற மாதிரி படம் ரிலீசுக்கு முன்னே பிரீ புக்கிங் கலெக்ஷனில் கிட்டத்தட்ட 30 கோடி அளவில் வசூலை பார்த்து விட்டது. அந்த வகையில் கண்டிப்பாக திரையரங்குகளில் ரிலீசான பிறகு போட்ட பட்ஜெட்டில் இருந்து டபுள் மடங்கு வசூலை பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மேலும் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை டிஸ்னி ஸ்டார் தெலுங்கிலும், டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை Netflix வாங்கி இருக்கிறது. அத்துடன் தமிழில் இப்படத்தை விநியோகம் செய்யும் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கி இருக்கிறது. அந்த வகையில் அனைவரையும் திருப்திப்படுத்தும் விதமாக இப்படம் எப்படி இருக்கு போகிறது என்று நாளை தெரிந்து விடும்.

Also read: நண்பனுக்காக தூண்டில் புழுவாகவும் இருப்பேன், திமிங்கலமாகவும் மாறுவேன்.. அனல் பறக்கும் சலார் ட்ரைலர்

Trending News