வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

கண்ணம்மாவை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சாமியார்.. ஐபிஎஸ் மூளைக்கு வேலை தந்த சந்தியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 தொடர்கள் மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது போலி சாமியாரின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்ற கண்ணம்மா மற்றும் சந்தியா இருவரும் போராடி வருகின்றனர். ஆனால் ஜெகஜாலக்கில்லாடி ஆக இருக்கும் போலி சாமியார் எல்லா பால்களையும் சிக்ஸர் அடித்து வருகிறார்.

இந்நிலையில் நடுராத்திரியில் ஈரத் துணியுடன் பார்வதி, கண்ணம்மா, சந்தியா மூவரும் தீச்சட்டி எடுத்து கொண்டு ஊரை சுற்றி வருகிறார்கள். அப்போது அந்த சாமியார் ஆட்களை வைத்து சந்தியாவை அடித்துவிட்டு கண்ணம்மா மற்றும் பார்வதியை கடத்திவிடுகிறார்.

இதனால் சரவணன், பாரதி, சந்தியா ஆகியோர் அவர்களை தேடுகின்றனர். மேலும் அடியாட்கள் கண்ணம்மா, பார்வதி இருவரையும் கட்டிப்போட்டு வைத்துள்ளனர். அதில் ஒருவர் பார்வதி மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்த செல்கிறார். மறுபக்கம் திருட்டு பழி விழுந்த சிவகாமி இந்த விஷயத்தை கேட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்.

இந்நிலையில் மறுநாள் சிவகாமி வீட்டின் முன்னிலையில் ஒரு கிப்ட் பாக்ஸ் உள்ளது. அதை திறந்து பார்க்கும் போது முடி மற்றும் மோதிரம் இருக்கிறது. அப்போது இது பார்வதியின் மோதிரம் என அனைவரும் அழுகின்றனர். மேலும் மறுநாள் ஒருவரின் இறந்த உடலை பார்த்த சிவகாமி வீட்டுக்கு போலீஸ் தகவல் சொல்கின்றனர்.

அது பார்வதி தான் என்று நினைத்த அவரது கணவர் கட்டிக்கொண்ட அழுகிறார். ஆனால் அது பார்வதியாக இருக்காது. இந்நிலையில் தற்போது சந்தியா தனது ஐபிஎஸ் மூளைக்கு வேலை கொடுத்து கண்ணம்மா, பார்வதி எங்கே கடத்தி வைத்துள்ளார்கள் என்ற இடத்தை கண்டுபிடிக்க உள்ளார்.

அதன்மூலம் இந்த போலீஸ் சாமியாரின் சுயரூபத்தையும் இந்த ஊருக்கு வெட்டவெளிச்சமாக சந்தியா காட்டயுள்ளார். இவருக்கு உறுதுணையாக சரவணன் மற்றும் பாரதியும் இருக்க உள்ளனர். இவ்வாறு பல அதிரடி திருப்பங்களுடன் இந்த வாரம் மகா சங்கமம் ஒளிபரப்பாக இருக்கிறது.

Trending News