வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

பட்ஜெட் தாக்கலால் 2 வது நாளாக குறைந்த தங்கத்தின் விலை.. கிராமுக்கு எவ்வளவு கொறஞ்சிருக்கு தெரியுமா?

Reducing Gold Rate: கடந்த பத்து வருஷத்துல எதிர்பார்க்காத அளவுக்கு தங்கம் கிடுகிடுவென கூடிக்கொண்டே போயி வாங்க முடியாத அளவிற்கு தங்கத்தின் விலை அதிகரித்து இருக்கிறது. இதனால் தங்கத்தையே வெறுக்கும் அளவிற்கு அதன் மீது ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. அந்த வகையில் நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய அளவிலான பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டதை ஒட்டி தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது.

அதற்கு என்ன காரணம் என்றால் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 6 சதவீதமாக குறைந்திருக்கிறது. இதனால் தங்க விலையும் குறைந்தது.

15 சதவீதத்திலிருந்து 6 சதவீதம் குறைவு

நேற்று சென்னையில் ஒரு பவனுக்கு 2200 குறைந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்று ஒரு பவுனுக்கு 480 ரூபாய் குறைந்து 52,400இருந்து 51920 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

அத்துடன் தங்கம் கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து 6490க்கும், பவுனுக்கு 480 ரூபாய் குறைந்து 51920 வரைக்கும் விற்பனையாகி வருகிறது.இதைப் போல் வெள்ளியும் கிலோவுக்கு 3.50 ரூபாய் குறைந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இன்னும் வெகு வெகுவாக குறைந்து ஒரு கிராம் மீது நூறு ரூபாய் குறையவும் வாய்ப்பு இருக்கிறது.

அந்த வகையில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் மக்கள் தங்கத்தையும் வெள்ளியும் வாங்கி வைப்பதற்காக நகைக்கடைக்கு கூட்டம் கூட்டமாக போகிறார்கள்.

மேலும் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறக்குமதி வரியை குறைத்ததால் தற்போது யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. இதனால் நடுத்தர மக்களும் ஆசைப்பட்ட மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வைத்த பணத்தில் நகையை வாங்க முடியும்.

தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் விபரங்கள்

- Advertisement -spot_img

Trending News