வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இந்த கிளம்பிட்டாங்கல்ல கோர்ட்டு கேஸ்னு.. சூப்பர் ஸ்டாரை பத்தி பாட்டு பாடுனது குத்தமாயா.?

Rajini Jailer Hukum Song : பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் ஒன்றாக ரிலீசானால் மட்டுமே போட்டி போட்டு ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள். ஆனால் தற்போது அந்தப் படங்கள் ரிலீஸ் ஆகுவதற்கு முன் அதில் உள்ள பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு வந்தாலே ஒவ்வொரு நடிகர்களுடைய ரசிகர்களும் மோதிக் கொள்ளும் நிலைமை ஆகிவிட்டது.

அந்த வகையில் தற்போது இணையத்தை புரட்டிப் போடும் அளவிற்கு விஜய் பாடலான நான் ரெடி தான் வரவா மற்றும் சூப்பர் ஸ்டார் பாடலான காவலா இந்த இரண்டு பாடல்களுமே ஒன்றுக்கொன்று சலிச்சது இல்லை என்ற அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்ததாக ரஜினியின் ஜெயிலர் படத்தில் இரண்டாவது சிங்கிளாக வெளியான ஹுக்கும் பாடல் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி நல்ல பவர்ஃபுல் மாஸாக வெளியாகி உள்ளது.

Also read: உடல் தோற்றத்தில் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் கல்லாக் கட்டும் 5 ஹீரோக்கள்.. ஸ்டைலை வைத்து 3 தலைமுறைகளாக அசத்தும் ரஜினி

தற்போது இப்பாடல் வெளியானதில் இருந்து எங்கே பார்த்தாலும் இதைப்பற்றி தான் பேச்சுக்கள். இன்னொரு பக்கம் சமூக அக்கரை விரும்பிகள் இந்த பாட்டுக்கு எதிராக சர்ச்சையை எழுப்பி வருகிறார்கள். அதாவது இந்த பாட்டில் வரும் வரிகள் ரஜினி ரசிகர்களையும், பொதுமக்களையும் கேவலப்படுத்துவதாக இருக்கிறது என்று.

அதாவது “குட்டிச்சுவரை எட்டிப் பார்த்தால் உசுரை கொடுக்க கோடி பேர்” இந்த வரி பாடல்களை பிடித்துக் கொண்டு ரஜினி ரசிகர்கள் குட்டி சுவற்றில் தான் கிடக்கிறார்களா? அவர்களுக்கு குடும்பம் வேலை என்று கிடையாதா? இப்படி எல்லாம் பாட்டு எழுதலாமா? இது என்ன வரின்னு எழுதி இருக்கிறீர்கள் என்று இப்பாடலை எழுதிய ஆசிரியருக்கு எதிராக பிரச்சனையே கிளப்பி வருகிறார்கள்.

Also read: ஒரு டேக்கில் நடிப்பதற்கு நான் என்ன கமலா.? இசையமைப்பாளரை வாயடைக்க வைத்த சூப்பர் ஸ்டார்

அதாவது இப்பாடல் ஆசிரியர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த பாடலை எழுதியபோது நான் தலைவருடைய ரசிகராக என்னை பாவித்து ஒவ்வொரு வரிகளையும் நான் எழுதியுள்ளேன். ஏனென்றால் நான் அவருடைய தீவிரமான ரசிகன் அதற்கு ஏற்ற மாதிரி தான் ஒவ்வொரு வரிகளையும் யோசித்து இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

இவர் கூறியது என்னமோ சாதாரணமாகத்தான் ஆனால் அதை பெரிய தவறான வார்த்தைகள் என்று கோர்ட்டு கேஸ்னு கிளம்பிட்டாங்க. சூப்பர் ஸ்டாரை நினைத்து பாடல் எழுதியது ஒரு குத்தமா என்று யோசிக்கும் அளவிற்கு தற்போது எல்லா விதத்திலும் நோண்டிக்கொண்டு சர்ச்சையை எழுப்புகிறார்கள் என்று இப்பாடல் ஆசிரியர் புலம்பி தவிக்கிறார்.

Also read: ரஜினி பெயரை வைத்து கோடிக்கணக்கில் மோசடி.. மிகப்பெரிய தில்லாலங்கடி வேலை பார்த்த கும்பல்

Trending News