சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

Bhakkiyalakshmi: கோபிக்கு சைலண்டாக ஆப்பு வச்ச பாக்கியா.. ஈஸ்வரியை வச்சு செய்ய போகும் ராதிகாவின் அம்மா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப கோபி பாக்யாவை கஷ்டப்படுத்துவதற்காக ஈஸ்வரியை தன்னுடன் அழைத்துப் போக திட்டமிட்டு இருந்தார். ஆனால் அதுவே அவருக்கு மிகப்பெரிய ஆப்பாக மாறப்போகிறது.

அதாவது தன்னுடன் அம்மாவை கூட்டிட்டு போகும் பொழுது குடும்பத்தில் இருப்பவர்களும் வருத்தப்படுவார்கள். அத்துடன் பாக்கியா அத்தை போகாதீங்க போகாதீங்க என்று கெஞ்சி கதறி அழுவாய் என்று கோபி எதிர்பார்த்தார். ஆனால் பாக்கியா, நீங்கள் உங்க பையன் வீட்டிற்கு போகிறீர்கள். இதில் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று ஈஸ்வரியை அனுப்பி வைத்துவிட்டார்.

சைலண்டாக இருந்து வேடிக்கை பார்க்கும் பாக்யா

ஆனால் இதன் பிறகு தான் கோபிக்கு உண்மையான டார்ச்சர் என்றால் என்னவென்று புரிய போகிறது. அதாவது இதுவரை மருமகள் மாமியாருக்கும் தான் சண்டை நடந்திருப்பதை பார்த்திருப்போம். ஆனால் ராதிகா வீட்டுக்கு போன ஈஸ்வரிக்கும் ராதிகாவின் அம்மாவுக்கும் இனி ஒவ்வொரு நாளும் போர்க்களமாக தான் இருக்கப் போகிறது.

இவர்களுக்கு இடையில் கோபி தலையை பிச்சுகிட்டு பைத்தியக்காரர் போல் அலையப் போகிறார். வழக்கம்போல் ராதிகா அம்மாவுக்கு தான் சப்போர்ட் பண்ணப் போகிறார். கடைசியில் ஈஸ்வரி கோபியை நம்பி போனதால் சிக்கலில் சிக்க போகிறார். அந்த வகையில் ராதிகாவின் அம்மாவிடம் மாட்டிக் கொண்டு ஈஸ்வரி படாதபாடு படப் போகிறார்.

இதெல்லாம் தெரிந்துதான் பாக்கியா சைலன்டாக இருந்து கோபி கூட அனுப்பி வைத்து விட்டார். இனி கோபி வீட்டில் ஒவ்வொரு நாளும் ரணகளம் தான். அதன் பின்பு தான் ஈஸ்வரிக்கு உண்மையிலேயே பாக்யாவின் அருமை புரியப்போகிறது.

கடைசியில் கோபி யாருக்கு சப்போர்ட் பண்ணுவது என்று தெரியாமல் வழக்கம்போல் புலம்ப போகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா அனுபவி ராஜா என்று சொல்வதற்கு ஏற்ப கோபி நிலைமை அதோ கெதியாக மாறப் போகிறது.

Trending News