வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

ராஜி மூலம் பாண்டியனுக்கு வரும் பிரச்சினை.. தங்கமயிலுக்கு கொடுக்கும் கிரீன் சிக்னல், கோபத்தில் மீனா

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தங்கமயில் ரூமை விட்டு வெளியே வரவில்லை என்று தெரிந்ததும் மீனா மற்றும் ராஜி அவரை பார்க்கப் போகிறார்கள். போனதும் தங்கமயிலை எழுப்பி என்னாச்சு எப்போதும் சரவணன் மாமாவுக்கு சாப்பாடு கொண்டுட்டு போவீங்க. இன்னைக்கு ஏன் இன்னும் போகவில்லை உடம்புக்கு ஏதும் பிரச்சனையா என்று கேட்கிறார்கள். அதற்கு தங்கமயில் அதெல்லாம் ஒன்னும் இல்லை கொஞ்சம் சோர்வாக இருக்கிறது. தூங்கினால் சரியாகும் என்று சொல்கிறார்.

உடனே மீனா, ராஜி சரி தூங்கி ரெஸ்ட் எடுங்கள். ஏதாவது தேவை என்றால் கூப்பிடுங்கள் நாங்கள் வருகிறோம் என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்கள். அதன்பிறகு மீனா, ராஜி, செந்தில், பழனிச்சாமி அனைவரும் வெளியில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது கதிர்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லிய நிலையில் ராஜி அவர் லேட்டா தான வருவார் என்று சொல்கிறார்.

செந்தில் இடம் கோபப்படும் மீனா

அதற்கு பழனிசாமி இல்லை இன்னைக்கு சீக்கிரம் வந்து விடுவார் என்று சொல்கிறார். உடனே செந்தில் முதல் நாள் வேலை தானே அதனால கொஞ்சம் டயர்டாக இருக்கும் என்று கூறுகிறார். இதை கேட்டதும் மீனா, கதிர் வேலைக்கு போய் பல நாட்கள் ஆகுது நீங்க முதல் நாள் என்று சொல்கிறீர்கள் என்று கேட்கிறார். அப்பொழுது செந்தில் இல்லை இத்தனை நாளாக பைக்கில் போய்க்கொண்டு இருந்தான். இப்பொழுது சைக்கிளில் போய் டெலிவரி கொடுத்துட்டு வருகிறான் என்று சொல்கிறார்.

இதை கேட்டதும் ராஜி முகம் வாடிப் போய்விட்டது. அந்த நேரத்தில் சைக்கிளில் டெலிவரி கொடுத்துட்டு கதிர் வீட்டுக்கு வருகிறார். ஆனாலும் கதிர் இதை பெரிதாக காட்டிக் கொள்ளாமல் குளித்துவிட்டு வருகிறேன் என்று உள்ளே போய்விடுகிறார். இதற்கிடையில் கதிரிடம், மீனா நான் கொஞ்சம் பணம் சேர்த்து வைத்திருக்கிறேன் அதை தருகிறேன். அதை வைத்துக்கொண்டு பைக்கை வாங்கிக்கோங்க என்று சொல்கிறார்.

ஆனால் கதிர் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்று சொல்லி மறுத்து விடுகிறார். அடுத்து வீட்டிற்கு வந்த சரவணன் குரலை கேட்டதும் தங்கமயில் ட்ராமாவை ஆரம்பித்து விடுகிறார். அதாவது படுத்துக் கொண்டு உடம்பு சரி இல்லாத போல் சீன் போடுகிறார். இதை பார்த்த சரவணன், என்ன ஆச்சு தங்கமயில் உனக்கு உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார். அதற்கு தங்கமயில் உடம்பெல்லாம் நல்லா தான் இருக்கிறது மனசு தான் சரியில்லை என்று சொல்கிறார்.

அதாவது இரவு நீங்கள் கீழே வராமல் என்னை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் மாடியிலேயே உங்க தம்பிகளுடன் தூங்கி விட்டீர்கள். நீங்கள் வரவில்லை என்று நினைத்து எனக்கு தூக்கமே இல்லை என பாசத்தை ஓவராக பொழிகிறார். அப்பொழுது சரவணன் இப்பொழுது நான் என்ன பண்ண வேண்டும் என்று கேட்கிறார். நம்ம இரண்டு பேரும் ஹனிமூன் போக வேண்டும் என்று கேட்டிருந்தேன்.

ஹனிமூன் கூட்டிட்டு போனால் அப்பொழுது நான் நம்புகிறேன் உங்களுக்கு என் மீது பாசம் இருக்கிறது என்று தங்கமயில் சரவணனிடம் சொல்கிறார். உடனே சரவணன் சரி என்று சொல்லி நிலையில் பாண்டியனிடம் பேச போகிறார். பாண்டியனும் ஒன்னு சொல்லாமல் இவர்கள் இருவரையும் ஹனிமூன் அனுப்பி வைக்கப் போகிறார்.

ஆனால் இதே மாதிரி தான் மீனா மற்றும் செந்திலும் போக நினைத்த பொழுது குடும்பத்துடன் போகலாம் என்று ஊட்டிக்கு போய் ஆர்ப்பாட்டம் பண்ணினார்கள். ஆனால் இப்பொழுது தங்கமயில் என்று வரும் பொழுது மட்டும் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டு மீனாவுக்கு ஓர்வஞ்சனை காட்டி விட்டார். இதனால் ஒட்டுமொத்த கோபத்தையும் மீனா, செந்தில் இடம் காட்டுகிறார்.

அடுத்ததாக குமரவேலுக்கு பெண் பார்க்க ராஜி குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் கிளம்புகிறார்கள். அந்த நேரத்தில் ராஜி அப்பா உன்னுடைய செயின் எங்கே அனைத்தையும் போட்டுட்டு வா என்று ராஜியின் அம்மாவிடம் கூறுகிறார். அந்த நகை அனைத்தும் ராஜிக்கு கொடுத்து விட்டார் என்பது சக்திவேல் மற்றும் முத்துவேலுக்கு தெரியாது. அதனால் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் அனைத்து நகையும் லாக்கரில் வைத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

எப்படியும் நிச்சயதார்த்தம் வைக்கும் பொழுது அந்த நகை அனைத்தையும் போட சொல்லி வற்புறுத்துவார். அப்பொழுது நகை அனைத்தையும் ராஜிக்கு கொடுத்து இருக்கிறார் என்று தெரிந்தால் இதை வைத்து பாண்டியன் குடும்பத்தை வம்புக்கு இழுப்பார். ஏற்கனவே ராஜி நகை அனைத்தையும் கதிர் செலவழித்தார் என்று சொல்லிய நிலையில் மறுபடியும் நகையே அபகரித்து விட்டார் என்று பாண்டியன் குடும்பத்தினர் மீது அவதூறாக பேசப் போகிறார்கள். அதனால் ராஜி மூலம் மறுபடியும் பாண்டியன் அவமானப்பட்டு நிற்கப் போகிறார்.

பாண்டியன் ஸ்டோரில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News