செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

மொத்த பழியையும் முத்து மீது போட்ட தினேஷ்.. மனோஜ் விஜயா சேர்ந்த ஆடும் ஆட்டத்தில் குளிர்காயும் ரோகினி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது. அது மட்டுமில்லாமல் க்ரிஷ் என்கின்ற ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. இதையெல்லாம் மறைத்து விட்டு தான் மனோஜை கல்யாணம் செய்து இருக்கிறார். ஆனால் இந்த ஒரு உண்மை யாருக்கும் தெரியாத நிலையில் தினேஷ் என்பவருக்கு மட்டும் ரோகிணி பற்றிய பழைய விஷயங்கள் தெரிந்திருக்கிறது.

அதனால் இந்த ஒரு விஷயத்தை வைத்து ரோகிணியை மிரட்டி அவ்வப்போது பணத்தை பறித்து வந்தார். தற்போது இதற்கு ஒரேடியாக முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தினேஷ், ரோகினிடம் 30 லட்சம் பணம் கேட்டு டிமாண்ட் பண்ணி இருக்கிறார். ஆனால் ரோகினிடம் அந்த அளவுக்கு பணம் இல்லாததால் தினேஷ் கதையை முடிக்க வேண்டும் என்பதற்காக லோக்கல் ரவுடி சிட்டியிடம் உதவி கேட்டு இருக்கிறார்.

முத்துவை நம்பாத விஜயா மனோஜ்

அந்த சிட்டி உதவி பண்ண தயாரான நிலையில் அவர் ரோகினிடம் முத்துவிடம் இருக்கும் ஒரு வீடியோவை கேட்டு டீல் பேசியிருக்கிறார். ரோகினிக்கும் வேறு வழி இல்லாததால் முத்துவிடம் இருந்த வீடியோவை எடுத்து தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இது எதுவும் தெரியாத தினேஷ், ரோகிணியை பயமுறுத்தி பணத்தை பறித்து விட வேண்டும் என்பதற்காக அவ்வப்போது மனோஜ்க்கும் மொட்டை கடிதாசி போட்டு பயங்காட்டி வருகிறார்.

அந்த வகையில் மனோஜ்க்காக கோவிலில் ஒருவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் போய் இருக்கிறது. இதை தெரிந்து கொண்ட மனோஜ் அந்த மொட்டைக் கடிதாசி நபர் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ரோகிணி மற்றும் அடியாட்களை கூட்டிட்டு போகிறார். அங்கே போனதும் சாமியார் வேஷத்தில் தினேஷ், மனோஜிடம் பேசுகிறார்.

இதையெல்லாம் பார்த்த பயத்தில் ரோகினி எதுவும் பேச முடியாமல் வாய் அடைத்து போய் நின்னு வேடிக்கை பார்க்கிறார். அப்பொழுது மனோஜ், யார் உன்னிடம் இந்த கடிதாசியை கொடுத்தார் என்று கேட்ட நிலையில் உன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் என்று சொல்லிய நிலையில் மனோஜ், முத்து போட்டோவை மொபைலில் இருந்து காட்டி இவன்தானா என்று கேட்கிறார்.

அதற்கு அந்த தினேஷ், முத்துவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக ஆமாம் என்று சொல்லிவிடுகிறார். ஏனென்றால் ஒரு முறை தினேஷ் போலீஸிடம் மாட்டிக் கொண்டு ஜெயில் போவதற்கு முத்து காரணமாக இருந்திருக்கிறார். அதனால் இதுதான் சான்ஸ் என்று முத்து மீது பழியை போட்டு விடுகிறார். உடனே மக்கு மனோஜ், இந்த முத்துவை நான் என்ன பண்ணுகிறேன் பாரு என்று வீட்டுக்கு கோபத்துடன் போகிறார்.

போனதும் அங்கே இருப்பவர்கள் அனைவரிடம் முத்து தான் இந்த கடிதாசியை போட்டு இருக்கிறார் என்று சொல்கிறார். உடனே விஜயா எப்படி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் அம்மாக்கு நெஞ்சு வலி வந்துவிடும் மனோஜ் செத்து போயிருவான் என்றெல்லாம் எழுதி இருக்கிறான் என்று மனோஜ் சொல்வதை நம்பி முத்துவை திட்டுகிறார்.

ஆனால் மீனா என் வீட்டுக்காரர் அப்படி எல்லாம் பண்ணக்கூடிய ஆள் கிடையாது என்று சொல்கிறார். ஆனாலும் விஜயா மற்றும் மனோஜ் சேர்ந்து முத்து தான் இந்த மாதிரி பன்னிருப்பான் என்று முத்துவை திட்ட ஆரம்பிக்கிறார்கள். அதிலும் விஜயா, மீனாவை பார்த்து நீயும் உன் புருஷனும் வீட்டை விட்டு வெளியே போங்க என்று மண்டைல கொஞ்சம் கூட மூளையே இல்லாத அளவிற்கு பேசுகிறார்.

இதையெல்லாம் பார்த்த ரோகினி, எது எப்படியோ எந்த பிரச்சினை வந்தாலும் முத்துமேல்தான் விழுகிறது. நம்மளுக்கு அதுதான் வேணும் என்று வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்கிறார். அது மட்டும் இல்லாமல் முத்து மீனா வெளியே போய்விட்டால் நமக்கு சந்தோசம் தான் என்று குளிர்காய ஆரம்பித்து விடுகிறார். ஆனால் இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக முத்து வந்தால் தான் மக்கு மனோஜ்க்கும் விஜயாவுக்கும் மூஞ்சில் கரியை பூசும் விதமாக பதிலடி கொடுப்பார்.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Trending News